அஷ்ரப் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுக்க, எல்லோரும் சபதமெடுக்க வேண்டும் - ஹரீஸ்
சகல சமூகங்களாலும் மெச்சப்படுகின்ற பெருந்தலைவர் அஷ்ரஃப் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுக்க எல்லோரும் சபதமெடுக்க வேண்டுமென அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக் மற்றும் இலவென் ஏஸ் விளையாட்டுக்கழகம் ஆகியன இணைந்து நடாத்திய தலைவர் அஷ்ரஃப் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணம் 2018 மின்னொளி மெகா சுற்றுப்போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) முதல்வர் தவம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தவைரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எமது சமூகத்தின் தலைவராக இருந்து கடந்த 18 வருடங்களுக்கு முன்பு மரணித்த பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களுடைய வெற்றிடம் இன்னும் சமூகத்திற்குள் பேசப்படுகின்ற விடயமாக காணப்படுகின்றது. குறிப்பாக எமது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வின்றி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றபோது அந்த மாபெருந்தலைவரின் தேவை எல்லோராலும் உணரப்படுகின்றது.
இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் அதில் குறிப்பாக முஸ்லிம் சமூகம் பல்வேறு கட்டங்களில் பல விதமான சோதனைகளை எதிர் கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அவரின் வெற்றிடம் உணரப்படுவதோடு அவர் ஆற்றிய பணியினை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம்.
பெருந்தலைவர் ஆற்றிய மக்கள் பணி வரலாற்றுச் சாதனையாக இன்று எல்லோராலும் மெச்சப்படுகின்றது. கட்சிவேறுபாடுகளுக்கு அப்பால் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அத்தனை கட்சிகளும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இன்று அவருடைய சாதனையை பேசுகின்றன.
பெரும்பான்மை சமூகத்தின் தலைமைகள் கூட இந்த நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு தலைவர் ஆற்றிய சேவையினையும் பேசுகின்றனர். இது எமது தலைவருக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக நாங்கள் பார்க்கின்றோம். எனவே அவ்வாறான ஒரு தலைமை எம்முடன் இல்லாத சூழ்நிலையில் அவர் விட்டுச் சென்ற பணிகளை மேற்கொள்வதற்கு எல்லோரும் சபதமெடுக்க வேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
(அகமட் எஸ். முகைடீன்)
பொது மக்களை வேலை வெட்டி இல்லாதவங்க என்று எண்ணிவிட்டானுகள் இந்த தற்குறிகள்.
ReplyDeleteஅஷ்ரப்பின் மறைவுக்குப் பின் கட்சியை பொறுப்பெடுத்த கழுதைகள் எல்லாம் அஷ்ரப் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்றி கிழிச்சிட்டாங்க.
20 வருடங்கள் கழித்து இப்போதான் ஞாபகம் வந்ததோ அஷ்ரப் விட்டுச்சென்ற பணிகள்?
போங்கடா பன்னாடைகளா
Muslim Congress is only party which leads the religious crisis in srilanka
ReplyDelete