கோட்டாபய வெளிநாடு போகமுடியாது, கைரேகையும் பெறப்பட்டது
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு விஷேட மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் தலா 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையின் அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கும் வௌிநாடு செல்வதற்கும் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த 7 பேரின் கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவர்கள் விஷேட மேல் நீதிமன்றத்தில் இன்று (10) காலை ஆஜராகினர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Next sitting in Oct'18,another one in Jan'19, another one in April'19, another one in July'19, another one in Oct'19 and last one in Jan 2020. Mahinda will come & release. Game is over.
ReplyDelete