ஜனாதிபதி தேர்தலுக்கு, தயாராகிறார் பஷில்
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தயார் செய்யும் பணியை ஆரம்பித்துள்ளார்.
வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த அவர் நாடு திரும்புவதற்கு ஏற்கனவே நியமித்திருந்த தினத்திற்கு முன்னரே, நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பியதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகுந்த கரிசனை காட்டியுள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளுவதற்கான வேலைத்திட்டங்களிலும் இறங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
அதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் செயலணி ஒன்றை நியமித்துள்ளார். அத்துடன் அச்செயலணி ஒக்டோபர் மாதம் ஆரம்பப் பகுதியிலிருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு கட்சியின் தேசிய சம்மேளனத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தயார்செய்து வருவதாகவும் தெரிய வருகிறது. இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள வாக்குகளை இலக்காகக்கொண்டும் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் பொருளாதார அமைச்சு என்ற பெயரில் அதன் வங்கிக் கணக்கில் இருந்த ஆயரமாயிரம் கோடி ரூபாக்களை கொள்ளையடித்துக் கொண்டு தேர்தல் முடிந்ததும் நாட்டை விட்டு ஓடி தனது தாய்நாடான அமெரிக்காவுக்கு தஞ்சம் புகுந்தார்.நல்லாட்சி எனப்படும் பொன்னாச்சியின் வங்குரோத்து நிலைமையை நன்றாகப் பயன்படுத்தி இப்போது நாட்டு சனாதிபதியாக முயற்சியாம். களவாடிய நாட்டு மக்களின் கோடான கோடி பணத்துக்கு என்ன நடந்தது அதைத்திருப்பிக்கொடு.அதற்கான தண்டனையைக் கொடுக்க பொன்னாட்சிக்கு வக்கில்லை. எனவே மற்றொரு அமெரிக்க கள்ளன் ஆட்சியைக் கைப்பற்ற திருட்டு முயற்சி. இந்த நாட்டு மக்கள் இன்னும் தூங்கிக் கொண்டு இருக்கின்றனரா?
ReplyDelete