Header Ads



பிரதியமைச்சர் நளினின் கருத்துக்கு, ஹிஸ்புல்லாஹ் மறுப்பு

தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஆயுத விவகார குற்றச்சாட்டு தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அது சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதேவேளை, தான் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடமே முறைப்பாடு செய்ததாகவும் அதன் பிரதியமைச்சரிடம் எந்த முறைப்பாட்டையும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், ஆயுத விவகார குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்தி அதன் அறிக்கையினை பொலிஸ் மா அதிபரிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

‘ஆயுத விவகார குற்றச்சாட்டு தொடர்பில் நானோ, அமைச்சர் ரிஷாட் பதியூதீனோ இதுவரை முறையிடவில்லை’ என சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார நேற்று சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். 
இதற்கு மறுப்புத் தெரிவித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- 

‘புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி 2018.08.18ஆம் திகதி கொழும்பில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எனக்கும், அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக உண்மைக்கும் புறம்பான அப்பட்டமான போலிக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தது.
இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் பல சதித்திட்டங்கள் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே இவ்விடயத்தை நாங்கள் மிகவும் நிதானமாகவே அனுகினோம். இந்நிலையில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இக்குற்றச்சாட்டு தொடர்பில் பூரண விசாரணையொன்றை நடத்துவதாக 2018.08.20 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கமாக அறிவித்திருந்தார். 

பின்னர் என் மீதான குற்றச்சாட்டுக்களை நான் மறுப்பளித்து சட்டம் ஒழுங்கு அமைச்சினால் முன்னெடுக்கும் சகல விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக 2018.08.21ஆம் திகதி அறிவித்திருந்தேன். என்றாலும், தொடர்ந்தும் இந்த விடயம் தெற்கு அரசியில் பேசு பொருளாக மாறியதை அடுத்து 2018.08.31ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு நான் விசேட கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தேன். அதில் என் மீதான போலிக் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்திருந்ததுடன், உரிய விசாரணைகளை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என கோரியிருந்தேன். 

தொடர்ந்தும் நான் அரசியல் உயர் மட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், சபாநாயகர் கரு ஜயசூரிய என் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடம் 2018.09.05ஆம் திகதி வேண்டுகோள் விடுத்திருந்தார். அத்துடன், இக்குற்றச்சாட்டானது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனும், நாட்டின் தேசிய பாதுகாப்புடனும் சம்பந்தப்பட்டுள்ளமையால் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணை அறிக்கையினை சபாநாயகருக்கு அவரசரமாக வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், எனது தரப்பால் இவ்வாறு பல முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் எந்த முறைப்பாடும் கிடைக்கில்லை என பொறுப்பற்ற வகையில் பகிரங்கமாக கூறுவது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல – என்றார்.

4 comments:

  1. கொலை செய்தவரே பொலிசுக்கும் தகவல் தெரிவிப்பாராம், ஏனென்றால், அப்படிசெய்தால் தன்னை ஒருவரும் சந்தேகபடமாட்டார்கள் என்ற ஒரு நட்பாசை தான்.
    அந்த மாதிரி இருக்கு இந்த கதை

    ReplyDelete
  2. Ajan you are the bloody murderer. Shut up your bloody mouth. If not I will make you shut.

    ReplyDelete
  3. அந்தோணி இது எங்களுடைய jaffna முஸ்லிம் .இதில் உனக்கு என்னடா வேலை,உனக்கு வார்த்தைபிரயோகம் தெரியாது ,நீ ஒரு கூ முட்டை .

    ReplyDelete
  4. தமிழ்ச்செல்வனை, கே.பி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடிக்க முடியுமென்றால், ஆயுதம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கமுடியாமலா இருக்கின்றது இலங்கை புலனாய்வு பிரிவிற்கு? குடிகார அந்தோனிக்கு

    ReplyDelete

Powered by Blogger.