Header Ads



கட்­டாரை தனி ஒரு தீவாக, மாற்­று­வ­தற்கு சவூதி திட்டம்

சவூதி அரே­பி­யா­வா­னது வளை­குடா பிராந்­தி­யத்­தி­லுள்ள தனது எதி­ரா­ளி­யான கட்­டாரை ஒரு தீவாக மாற்றும் வகையில் அந்­நாட்­டிற்கும் தனது நாட்­டிற்­கு­மி­டையில் பாரிய கால்­வா­யொன்றைத் தோண்டத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கட்டார் தீவி­ர­வா­தத்­திற்கு உதவி வரு­வ­தாகத் தெரி­வித்து அந்­நாட்­டு­ட­னான இரா­ஜ­தந்­திர மற்றும் வர்த்­தக  உற­வு­களை  சவூதி  அரே­பியா கடந்த வருடம் துண்­டித்­த­தை­ய­டுத்து  இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான  பதற்­ற­நிலை அதி­க­ரித்­துள்­ளது.

இந் ­நி­லையில் சவூதி அரே­பிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர்  மொஹமட் சல்­மானின்  சிரேஷ்ட ஆலோ­ச­க­ரான  சவுத் அல் கஹ்­தானி,   சவூதி அரே­பி­யா­வுக்கும் கட்­டா­ருக்­கு­மி­டை­யி­லான நில ரீதி­யான இணைப்பைத் துண்­டிக்கும் வகையில் இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் பாரிய கால்­வா­யொன்றைத் தோண்­டு­வ­தற்­காக உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள  சல்வா தீவு  திட்டம் குறித்து  டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் தன்னால்  வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­தியில்  உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

சல்வா தீவு திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான விப­ரங்­க­ளுக்­காக தாம்  பெரும் எதிர்­பார்ப்­புடன் காத்­தி­ருப்­ப­தா­கவும் அந்த மாபெரும்  வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க திட்டம்  பிராந்­தி­யத்தின்  பூகோள ரீதி­யான தரைத்­தோற்ற அமைப்­பையே மாற்­று­வ­தாக அமையும் எனவும் அவர் கூறினார்.

 580   மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான செலவில்  ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள  மேற்­படி கால்வாய் 60  மைல் நீளமும் 200  மீற்றர் அக­லமும் கொண்­ட­தாக  அமையும் என அவர்  மேலும் தெரி­வித்தார்.

அந்தக் கால்­வாயின் ஒரு பகு­தியை  அணு­சக்தி கழிவை சேமிப்­ப­தற்­கான நிலை­யத்­திற்கு ஒதுக்­கீடு செய்­ய­வுள்­ள­தாக அவர் கூறினார்.

இந்­நி­லையில் மேற்­படி திட்­டத்தை முன்­னெ­டுக்க  கால்­வாய்­களைத் தோண்­டு­வதில் நிபு­ணத்­து­வத்தைக் கொண்­டுள்ள  பெயர் வெளி­யி­டப்­ப­டாத 5  கம்­ப­னி­க­ளுக்கு  அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  அந்தக் கம்­ப­னியில்  ஒப்­பந்­தத்தைப் பெற்றுக் கொள்ளும் கம்­பனி தொடர்பில்  இந்த செப்­டெம்பர் மாதம் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கடந்த ஜூன் மாதம் பிராந்­திய பத்­தி­ரி­கைகள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில்  மேற்­படி டுவிட்டர் செய்தி குறித்து சவூதி அரே­பிய அதி­கா­ரி­களோ அன்றி கட்டார் அர­சாங்­கமோ    விமர்­சனம் எத­னையும்  இது­வரை வெளி­யி­ட­வில்லை. 


9 comments:

  1. Yaa Allah Unite our Muslim Brothers... and protect them from division.

    ReplyDelete
  2. Saudi does not have diplomatic skills and talent how to deal with people around them .
    Allah gave them oil and money they could not use them in right way to benefit poor people in Saudi but they always go for weak to punish them..

    They do not stand for strong but for weak like that of Qatar ..or Yemon ..
    Why is this ?
    Why they can not use this money for good work in ME

    ReplyDelete
  3. அரபிகளின் தலையில் உள்ளது கழிமண் என்பதற்கு இந்த முயற்சி மிகச் சிறந்த உதாரணம். உலக ராஜதந்திர, பொருளாதார, அரசியல் சவால்களை இந்த மந்தபுத்திபடைத்த அரபிகள் எவ்வாறு எதிர்நோக்கின்றார்கள் என்பதைப் பார்த்து மேற்கு உலகமும், ஐரோப்பிய உலகமும் வியப்புடனும் ஆச்சரியமாகவும் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

    ReplyDelete
  4. We love dunya
    Allah will give us fool mind.

    ReplyDelete
  5. Saudi Arabia is a big foolish country in the world. They depend on USA & Israeli

    ReplyDelete
  6. உடம்பிலிருந்து இதயம் வெளியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுவதற்கு ஒப்பானது இது!
    இறைவனால் தெரிவு செய்யப்பட்ட சமுதாயத்தினருக்கே இத்தகைய வெகுமதிகள்.  வரலாற்றின்படி இஸ்லாமிய உலகை ஆள்வதற்கு தயார்படுத்தும் ஓர் இறை நியதியாக இதனைக் கொள்ளலாம்.

    ReplyDelete
  7. What is it ..
    Saudi doing now .
    Locking up any one who speaks against it ..
    So ; cruel..
    Yet; now some salafi ulama are locked up..
    Now whose do not speak about politics are good ulama.and they are real salafi..
    So; ibn taymiah who went into jail for speaks against his time rulers is not a salafi .
    He spoke about politics .
    He went against rulers.
    So; now ...
    True nature of Salafism is clear

    ReplyDelete

Powered by Blogger.