சீறக் காத்திருக்கும் மைத்திரி, உச்சப் பரபரப்பில் இன்றைய அமைச்சரவையில் நடக்கப்போவது இதுதான்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (13) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானியான (சிடீஎஸ்), கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன விவகாரம் தொடர்பிலேயே ஆராயப்படவிருக்கின்றது என தகவல் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள, பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானியான, கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன, நாடு திரும்பியதும், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று (12) கொண்டுவந்திருந்தனர்.
இந்த விசேட கூட்டத்தில் பங்கேற்குமாறு, சகல அமைச்சர்களுக்கும், நேற்று (12) பகல், தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “நேவி சம்பத்” என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவர், மறைந்திருப்பதற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரை சி.ஐ.டியினர் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளனர்.
2
இராணுவத்தினர் மீது முன்வைக்கப்படும் கடுமையான விமர்சனங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கூடும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான கருத்துக்களை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை, இடிஅமீன் என அமைச்சர் சரத் பென்சேகா கடுமையாக விமர்சித்திருந்தமை தொடர்பிலும், பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானி ரவீந்தர விஜேகுணவர்தன மீதான விசாரணைகள் தொடர்பிலும் இன்று ஜனாதிபதி கருத்து தெரிவிப்பார் எனவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருக்கின்ற நிலையில், பிரதமர் இல்லாத இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான கருத்துக்களை தெரிவிப்பார் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூடியிருந்த நிலையில், மீண்டும் இதே வாரத்தில் இரண்டாவது தடவையாகவும் அமைச்சரவை இன்று கூடுகிறது.
if the CDS is guilty he will be punished by the courts of law. what is the big issue here ?
ReplyDeleteGreat example for good governance...
ReplyDelete