Header Ads



கிழக்கின் முதலமைச்சராக இனிமேல், தமிழர் ஒருவர்தான் வருவார்

கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து   தான் வருவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார் .

நேற்று மடடக் களப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட  செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்துக்குள் தீர்வு இல்லை என்றால் நாங்கள் தீர்க்கமாக பேசி நல்லதொரு முடிவினை எமது மக்களுக்கு தெரிவிப்போம் ஆகவே மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

கிழக்கை பொறுத்த வரையில் தமிழ் கட்சிக்குல் அறுதி பெரும்பாண்மையை பெற்று கொண்டதில்லை ஆகவே இங்கு ஆட்சி அமைப்பது என்பது மிகவும் ஒரு பாரிய சவலாகத்தான் இருக்கும்.

எனவே எமது கட்சி மக்களின் நலன் சார்ந்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் ,வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

10 comments:

  1. கிழக்கின் முதல்வராக இனி தமிழர் ஒருவர்தான் வருவார் என்று சொன்னதற்க்கு பதிலாக ஸ்ரீகாந்தா அவர்கள் சுழற்ச்சி அடிப்படையில் அடுத்த முதலமைச்சர் பதவி தமிழருக்கு கிடைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்க வேணும். கிழக்கு மாகாணத்தில் தமிழர் முஸ்லிம்கள் அடிப்படையில் முதல் அமைச்சர் பதவி சுளற்ச்சி முறையில் அமைதல் வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    ReplyDelete
  2. Mr Sriskandaraja,

    Do you think that the Eastern Province is your forefathers property. Please note that any body can come as a Chief Mininister through democratic process. It is not a matter whether he is a Sinhalese or Tamil or Muslim but we need a patriotic person.

    ReplyDelete
  3. சுழற்சி முறையில் கூடிய காலம் தமிழ் உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும். வடகிழக்கு இணைப்பு தவிர்க்க பட வேண்டும்.

    ReplyDelete
  4. மொக்கு ஸ்ரீகாந்தா உங்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு நாம் நாக்கு வலித்துக்கொண்டிருப்போம் என்று கனவு காணாதே

    ReplyDelete
  5. ஒரு கிருஸ்தவர் வருவார் என்றால் அந்தோனி good போடலாம் .ஏன் தமிழருக்கு குட்.முந்தி ஒரு பின்னூட்டலில்" நான் தமிழர் இல்லை கிருஸ்தவர் "என்று சொன்னிர்கள் .....பதிலை ஜோசித்து போடவும் அடுத்த கெள்வி இன்னும் ஒரு நேரம் வரும் .

    ReplyDelete
  6. @misrin, மதம் என்பதை இறைவனை அடையும் ஒரு வழி.

    அதை அரசியல் சாக்கடையில் துவைத்து, அரசியல் வியாபாரம் செய்யும் ஒரு பண்டமாக மாற்றி, பணம்-பதவிகள்-உல்லாசங்கள் அனுபவிக்க பயன்படுத்துவதும் நல்லதல்ல.
    இதைவிட ஒரு மோசமாக கேவளத்தை ஒரு மதம் க்கு ஒருவராலும் செய்ய முடியாது

    ReplyDelete
  7. தமிழ் முதலமைச்சரோ,முஸ்லிம் முதலமைச்சரோ கிழக்குக்குத் தேவையில்லை.மக்களின் அபிலாசைகளை நன்கு விளங்கி தியாகத்துடன் அவற்றைப் பெற்றுக் கொடுக்க உழைக்கும், நாட்டுச் சொத்துக்களைச் சூறையாடாத ஒருவர் முதலமைச்சராக வந்தால் அதுவே போதுமானது.

    ReplyDelete
  8. வயசு போன அளவுக்கு பக்குவம் வளரல மரமண்ட இரு இனங்களும் ஒன்றாக இருக்காத வரை தமிழரின் கோரிக்கை கனவிலும் பலிக்காது என்பது இந்த மொக்கனுக்கு தெரியுதுள்ள பாவம்

    ReplyDelete
  9. இஸ்லாமிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர சிங்களவரை கூட முதலமைச்சராக அனுமதிக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.