கோத்தபயவுக்கு ஆப்பு வைக்க, துடிக்கும் அரசாங்கம்
இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை கடுமையாக்குவதற்கு புதிய சட்டமொன்று உருவாக்கப்பட உள்ளது.
தற்போதைய அரசாங்கம் இது தொடர்பிலான சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்டளைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை முடக்கும் நோக்கில் புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஓராண்டுக்கு முன்னதாக இரட்டைக் குடியுரிமையை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே இந்த இரட்டைக் குடியுரிமையை அகற்றிக் கொண்டமைக்கான ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டுமென சட்டத்தில் குறிப்பிடப்பட உள்ளது.
இந்த சட்டம் உருவாக்குவது குறித்து அரசாங்கத் தரப்பினரும் சட்ட ஆலோசகர்களும் ஆராய்ந்து வருவதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பதுடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment