Header Ads



தொலைபேசியில் மூழ்கி வியோதிபத் தாய்க்கு, இடம்கொடுக்காதவர்களுக்கு பாடம்புகட்டிய சாரதி

பேருந்தில் தத்தளித்த வயோதிப தாய்! இளைஞர் - யுவதிகளுக்கு பாடம் புகட்டிய சாரதி! நெகிழ்ச்சி சம்பவம்

சமகால இளைஞர், யுவதிகளுக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் செயற்பட்ட சாரதி ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

பேருந்தில் ஏறிய வயோதிப தாய் ஒருவருக்கு எந்தவொரு நபரும் அமர்ந்து கொள்ள ஆசனம் வழங்கவில்லை.

இதன் காரணமாக கடும் கோபம் அடைந்த பேருந்து சாரதி, தனது ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுமாறு வயோதிப தாயை கேட்டுள்ளார்.

சாரதியின் செயற்பாடு குறித்த பேருந்தில் பயணித்த அனைவருக்கும் இது மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.

கந்த உடரட்ட பிரதேசத்தின் பிரதான உப நகரங்கள் இரண்டிற்கு இடையில் பயணித்த பேருந்தில் அனைத்து ஆசனங்களும் நிறைந்து காணப்பட்டுள்ளது.

பேருந்து பயணித்து சிறிது தூரம் செல்லும் போது குறித்த பேருந்தில் நோயாளியான வயோதிப தாய் ஒருவர் ஏறியுள்ளார்.

பேருந்தில் அதிக கூட்ட நெரிசல் காணப்பட்டமையினால் மிகவும் சிரமத்துடன் குறித்த தாயார் பயணித்துள்ளார். எனினும் ஒருவரேனும் அவருக்கு ஆசனம் வழங்க முன்வரவில்லை.

பேருந்தில் அதிகமான இளைஞர், யுவதிகள் பயணித்த போதிலும் அவர்கள் கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்தமையினால் குறித்த வயோதிப தாயை கண்டுக்கொள்ளவில்லை.

இதனை அவதானித்த சாரதி, குறித்த வயோதிப தாயை அழைத்து, அம்மா இந்த பேருந்தில் ஆசனம் வழங்க ஒருவரும் இல்லை. என்னிடம் சாரதி ஆசனம் மாத்திரமே உள்ளது. இதில் அமர்ந்து முடியும் என்றால் பேருந்தை ஓட்டுங்கள். மேலும் பயணிகள் சென்றடைய வேண்டிய இடத்தில் அவர்களை இறக்கி விடுங்கள் என சாரதி சத்தமாக கூறியுள்ளார்.

சாரதியின் நியாயமான கோபத்தினை உணர்ந்து கொண்ட பயணிகள் வெட்கமடைந்த நிலையில், வயோதிப தாய்க்கு ஆசனம் வழங்க முன்வந்துள்ளனர்.

சாரதியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

1 comment:

Powered by Blogger.