Header Ads



நாங்கள் நினைத்திருந்தால், முழு நாட்டையும் செயலிழக்க செய்திருக்க முடியும்

மக்கள்சக்தி ஆர்ப்பாட்ட பேரணியின் போது, முக்கிய பொருளாதார மையங்களை முற்றுகையிட்டு அவற்றை செயலிழக்க செய்யும் திட்டங்கள் இருந்ததாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம், இலங்கை மின்சார சபை, தொடருந்து திணைக்களம், துறைமுகங்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் போன்ற இடங்களை செயலிழக்க செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் நினைத்திருந்தால், விமான நிலையம், மின்சார சபை ஆகியவற்றை மூடி முழு நாட்டையும் செயலிழக்க செய்திருக்க முடியும்.

அனைத்து தொடருந்து சேவைகளையும் நிறுத்தியிருக்க முடியும். துறைமுகங்களை செயலிழக்க செய்திருக்க முடியும். அனைத்து தொழிற்சங்கங்களுடன் இது பற்றி கலந்துரையாடியிருந்தோம்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் எங்களுடன் வீதியில் இறங்கியிருந்தால், விமான நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்திருக்காது.

விமான நிலைய தொழிற்சங்கங்கள் எங்களுடன் வீதியில் இறங்கியிருந்தால், விமானங்கள் பறந்திருக்காது. நாங்கள் அப்படியான திட்டங்களை வைத்திருந்தோம்.

எனினும் நாங்கள் அவற்றை செய்யவில்லை. அவற்றை செய்ய இன்னும் காலம் இருக்கின்றது. கொழும்பை முற்றுகையிடுவோம் என்ற நாங்கள் கூறியிருந்தோம்.

நாங்கள் கொழும்பை முற்றுகையிட்டோம். அனைத்து தொழிற்சங்கங்களும் வேறு நடவடிக்கைகளில் ஈடுபட எங்களிடம் இணக்கம் தெரிவித்திருந்தன.

தேவை இருந்தால், நாங்கள் கொழும்பில் தொடர்ந்தும் இருந்திருப்போம் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. புதிய திருடர்களை விரட்ட, பழைய திருடர்கள்

    ReplyDelete
  2. முதலில் DCSL முற்றுகை இடுங்கள் அப்போதுதான் நிறைய சாராயம் கிடைக்கும்.

    ReplyDelete
  3. Jayawewa mahinda rajapakksha

    ReplyDelete

Powered by Blogger.