Header Ads



வைத்தியர் இல்லியாஸ் மயங்கி விழுந்தார் - கொழும்பு குப்பைக்கு எதிரான உண்ணாவிரதம் தொடருகிறது


இன்று -29-  அதிகாலை தொடக்கம் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்று வரும் கொழும்பிலிருந்து கொண்டுவரப்படவுள்ள குப்பைக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டத்தில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான வைத்தியர் இல்லியாஸ் அவர்கள் மயக்கமுற்று ,சுய நினைவற்று இருப்பதுடன் ,  மேலும் ஒரு இளைஞன் மயக்கமுற்ற நிலையில் புத்தளம் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லாட்சியின் வெற்றிக்கு பங்காற்றிய புத்தளம் தொகுதிமக்களின் பிரச்சினை தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படாதது மிகவும் கவலையளிப்பதாகவும் மேலும் பொலிஸ் நிலையத்திறப்பிற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்ரம சிங்ஹ அவர்கள் புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதிக்கு வந்து சென்றும் இப்பிரச்சினைப்பற்றிய கருத்தில் கொள்ளாததும் கவலையளிப்பதாகவும் புத்தளம் தொகுதிமக்கள்,பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.


1 comment:

Powered by Blogger.