"எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல" அமெரிக்காவில் முழங்கிய அப்பாஸ், டிரம்பையும் விளாசினார்
பாலஸ்தீனத்தை சூறையாட நினைக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறாது என ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில், அந்நாட்டு ஜனாதிபதி முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபைக் கூட்டம் அமெரிக்காவில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘எந்த நாட்டின் சட்டத் திட்டங்களையும் மதிக்காமல் இஸ்ரேல் மனம்போன போக்கில் செயல்படுகிறது. டிரம்ப் தரும் ஆதரவால் இஸ்ரேல் தொடர்ந்து தனது இனவாத செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
ஐ.நா-வின் எந்த ஒரு விதிமுறைகளையும் இஸ்ரேலும், அமெரிக்காவும் கடைபிடிப்பதில்லை. அமெரிக்காவை நாங்கள் தற்போது புதிய கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம்.
அமைதி முயற்சியில் இனிமேலும் அமெரிக்க மத்தியஸ்த நாடாக இருக்க முடியாது. எங்களின் நண்பனாக இருக்க முடியாது. பாலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா முயற்சியில் நடக்கும் நலத்திட்டங்களுக்கு இனிமேல் நிதியுதவி அளிக்கப்போவதில்லை என டிரம்ப் நிர்வாகம் மிரட்டுகிறது.
எங்கள் நாடு என்றும் விற்பனைக்கு அல்ல. நாங்கள் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகளை மேற்கொள்வோம்.
1949ஆம் ஆண்டில் ஐ.நா உருவானது முதல் பாலஸ்தீன பகுதியில் அமைதியை ஏற்படுத்த இதுவரை 700 ஒப்பந்தங்களையும், உடன்பாட்டையும் மேற்கொண்டுள்ளோம். ஆனால் எதையுமே இஸ்ரேலும், அமெரிக்காவும் மதிப்பதில்லை’ என தெரிவித்துள்ளார்.
so if this two countries not ready to respect the international law which is passed in UNO, then they are not deserve to be in UNO and UNO is not relevant.Those who act against international and above the law are not civilized but war mongers and not peace lovers.
ReplyDeleteImthiyas, என்னதான் சொல்கிறீர்கள்?
ReplyDeleteDo you know that UNO officially recognised Israel as a independent country
அரபாத்தை கொன்றாச்சு, ஜெருசலேம் போயாச்சு, பாலஸ்தீனர்களை பட்டினி போடுகிறார்கள், குடியேற்றங்கள் தொடர்கின்றன. அப்படி என்னதான் யூதர்களுக்கு வேணுமாம் அந்த மண்ணில்? (மரியாதையுடன்) அல்லாவால் ஏன் ஒன்றும் செய்ய முடியவில்லை?
ReplyDeleteAlmighty Allahval enna seiya mudium enbadhai wait panni parungal brother , " ivvulaham visuvasihalukku oru sirachalai ponradhu " unardhawan vetri Peruwan illaiyel Pulihal ponru alindhuviduvaarkal kevalamaha,
ReplyDelete@ Unknown
ReplyDeleteபாலஸ்தீனத்தை இஸ்ரேலியர்கள் கைப்பற்ற முன்பும் கைப்பற்றிய பின்பும் அங்கு விஜயம் செய்த ஒரு முதியவரை நான் 1980 களில் சந்தித்தேன்.
இறைவனது முடிவு சரியானதுதான், அவன் யாருக்கும் அநியாயம் செய்வதில்லை, மனிதன் தனக்குத் தானே அநியாயம் செய்து கொள்கின்றான் என்ற எனது நம்பிக்கை இன்னும் உறுதியானது நான் அவரது பேச்சைக் கேட்டதன் பின்னால்.
அவர் சொன்னார், "முஸ்லிம்களின் முதலாவது தொழும் திசையாக இருந்த ஜெருசலத்திலுள்ள புனித பைத்துல் முகத்திஸ் பள்ளிவாசலுக்கு, புனித பயணத்தின்போது தொழுகைக்காகச் சென்றேன்.
கடமையான தொழுகைக்கான அழைப்பு நடந்தது. ஆனால், பள்ளிவாசல் நுழைவாயலுக்கு அருகிலேயே 'குடாக்கும் சீட்டாட்டமும்' என்று விளையாட்டில் ஈடுப்பட்டுக்கொண்டு முஸ்லிம்கள் தொழுகையைக் புறக்கணித்து இருப்பதை கவனித்தேன்.
முஸ்லிம்களது மூன்றாவது புனித பள்ளிவாசலான அதில் ஒரு வரிசை கூட தொழுகையாளர்களால் பூர்த்தியானதாக இருக்கவில்லை.
அதிலும் அதிகமானவர்கள் வயோதிபர்கள் மாத்திரம் தொழுகையில் ஈடுபட்டனர்.
அப்போதே நான் அறிந்து கொண்டேன். இவர்களுக்கு இறைவனின் சோதனை வரும் என்று.
மீண்டும் சில ஆண்டுகளின் பின்னால் அங்கு சென்றேன். இப்போது யூதர்கள் அப்பள்ளியையும் அதனைத் சுற்றியுமுள்ள பிரதேசங்களை கைப்பற்றி இருந்தனர்.
நான் முன்பு கண்ட தொழுகையைக் புறக்கணிப்பவர்களின் சீட்டாட்டக் கடைகள் எதுவும் அங்கு இப்போது இருக்கவில்லை. அங்கிருந்து அவர்கள் விரட்டப்பட்டு விட்டனர்.
இப்போது அங்கிருந்த மக்கள் யூதப் படையினருக்கு எதிராகப் கற்களை வீசி எறிந்து போராடிக் கொண்டு இருப்பதைக் கவனித்தேன்.
அப்போது நான் அனுமாணித்தது இப்போது நடந்து விட்டது" என்றார் அவர்.
தொலைக்காட்சியில் அவ்வாறான காட்சியொன்றை நாம் அவதானித்துக் கொண்டிருக்கும் போதுதான் இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா என்று என்னிடம் கேட்டுவிட்டு இவ்விதம் கூறினார், சவுதிக்கு புனித பயணம் நிமித்தம் வந்திருந்த முஸ்லிம் தென் ஆபிரிக்கச் சகோதரரான அவர்.
இன்றும் இந்த ஆக்கிரமிப்பு அங்கு தொடர்கின்றது என்றால் அம்மண்ணின் மைந்தர்களதும் பொதுவாக உலக முஸ்லிம்களதும் இறைக் கட்டளைகளுக்கு கட்டுப்படும் அளவை -அதிலும் அதி முக்கியமாக கடமையான தொழுகையை நிறைவேற்றும் அளவை- அளந்து பார்க்க வேண்டிய தேவையில் நாம் இருக்கின்றோம்.
பாலஸ்தீனத்தில் என்ன, இலங்கையிலும்கூட நமக்கு வரும் சோதனைகளுக்கு, கடமையான தொழுகையில் நாம் விடும் போடுபோக்குத்தான் பிரதான காரணம்.
அல்லாஹ்வால் செய்ய இயலாதது எதுவுமில்லை. ஆனால், நம்மை நாமே மாற்றாத வரையில் அவனும் மாற்றமாட்டான்.
இஸ்லாத்தில் தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல். இங்கு அது பைத்துல் முகத்திஸுக்கும்தான்!