Header Ads



ஞான­சாரரின் விடு­தலை பற்றி ஜனா­தி­ப­தி அக்­கறை கொள்­ளா­து­விடின், பிக்குகளை இணைத்­துக்­கொண்டு போராட்­டங்களை முன்­னெ­டுப்போம்

நாட்டை பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்தும் மீட்­டெ­டுத்த இரா­ணுவ வீரர்­க­ளுக்­கா­கவே ஞான­சார தேரர் ஹோமா­கம நீதி­மன்றில் குரல் கொடுத்தார். சட்டம் அவ­ருக்கு 6 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்­தி­ருந்­தாலும் ஜனா­தி­ப­தி­யினால் அவ­ருக்குப் பொது மன்­னிப்பு வழங்க முடியும். பொது மன்­னிப்பைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக நாட்­டி­லுள்ள அனைத்து பௌத்த குரு­மார்­களும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்போம் என பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அவ்­வ­மைப்பின் பேச்­சாளர் கலங்­கம சுதி­னா­நந்த தேரர் கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்; 

“ஞான­சார தேரரின் விடு­த­லைக்­காக நாம் நியா­ய­மான முறை­க­ளையே கையாள்வோம். நியா­ய­மான போராட்­டங்­க­ளையே நடாத்­துவோம். இவ்­வி­டயம் தொடர்பில் நாம் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து எமது கோரிக்­கை­களை முன்­வைக்­க­வுள்ளோம். ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள ஏனைய அமைச்­சர்­களைப் போன்று ஞான­சார தேரரின் விடு­தலை தொடர்பில் அக்­கறை கொள்­ளா­து­விடின் அனைத்து பௌத்த மத குரு­மார்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு போராட்­டங்­களை முன்­னெ­டுப்போம்.

கடந்த காலங்­களில் நீதி­மன்­றுக்குக் கல் எறிந்த அமைச்­ச­ருக்­கெ­தி­ராக இந்த அர­சாங்கம் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. அவர் தொடர்ந்தும் சுதந்­தி­ர­மாக அமைச்சுப் பத­வியை வகித்து வரு­கி­றார். ஆனால் இரா­ணு­வத்தின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்த ஞான­சார தேர­ருக்கு கடூ­ழிய சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. இது எமது நாட்டின் பௌத்த மத கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணா­ன­தாகும்.

இன்று தேசிய அர­சாங்­கத்தின் ஆட்­சியில் பௌத்த மதம் அழியும் நிலைக்­குள்­ளா­கி­யுள்­ளது. வட பிராந்­தி­யத்­திற்கு ஒரு சட்ட ஒழுங்கும் தெற்­கிற்கு வேறு வகை­யான சட்ட ஒழுங்கும் அமுல் நடாத்­தப்­பட்டு வரு­கி­றது. வடக்கில் பௌத்த மர­பு­ரி­மைகள், தொல்­பொ­ருட்கள் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

நாட்டின் பாது­காப்­புக்­கா­கவும் இராணுவ வீரர்களின் உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பிய ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். ஜனாதிபதி இது தொடர்பில் தாமதியாது செயற்பட வேண்டும் என்றார். 
-Vidivelli

1 comment:

  1. SLTJ you make protection.. Also including some MONK to keep this terror BBS Monk inside BARS.. This terror BBS Monk deserve punishment.

    ReplyDelete

Powered by Blogger.