Header Ads



பிணையில் வெளியேவந்த கோட்டாபய, பார்வையிடச் சென்ற மகிந்த

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட  7 பேருக்கு, விசேட மேல் நீதிமன்றில் அதி குற்றப் பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டுள்ள அதேவேளை, இவர்களை பிணையில் விடுதலை செய்யவும்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி நிர்மாணப் பணிகளின் போது  அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து, விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு  இன்று (10), விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, இவர்கள் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும்,  10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வ​ழக்கு, விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா ஜானகி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

2

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக் ஷவுக்கு எதிரான வழக்கு, விசேட மேல் நீதிமன்றில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதனை பார்வையிடுவதற்காக, முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் எம்.பியுமான மஹிந்த ராஜபக் ஷவும் நீதிமன்றத்துக்கு வருகைதந்திருந்தார்.

No comments

Powered by Blogger.