Header Ads



மதப் பிரிவினையை ஏற்படுத்த, மஸ்தான் முயல்கிறார் - சிவமோகன்

சுயநல வாக்குக்காக கிறிஸ்தவ, இந்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் முயல்கிறார் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்பு யுத்தம் முடிவுற்ற மண். அந்த மண்ணுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. அந்த மண்ணில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மேற்கொண்ட செயற்பாடு கண்டிக்கத்தக்கது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போது சாதி, மத, வர்க்க வேறுபாடுகள் இன்றி எமது மக்கள் வாழ்ந்த மண். அண்மையில் அவர் அங்கு சென்று கிறிஸ்தவ மக்களுக்கும், இந்து மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டை தோற்றுவித்த ஒரு நிலைப்பாடு நடந்தேறியது. 

கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற இச் செயற்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். தங்களது சுயவாக்குச் சேகரிப்புக்காக சமூகங்களை பிரித்து வைத்து அதில் சில பிரிவுகளை தங்கள் பக்கம் சாய்த்துக் கொண்டு அரசியலில் முன்னேற முயல்வது அரசியலின் ஒரு வங்குரோத்து நிலை என்றே நான் கருதுகின்றேன். 

புதுக்குடியிருப்பு மண்ணில் கிறிஸ்தவ, இந்து மக்கள் மிகவும் சுமுகமாக வாழ்ந்து வருகிறார்கள். அங்குள்ள கிறிஸ்தவ பாதிரியார்களுடன் சைவ மக்களுக்கு நிறைய தொடர்புகள் உள்ளது. எனவே அவர்களை பிரிதிது வைத்துக் கொண்டு சுயநல அரசியல் தேட இனிமேலாவது  பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் முயலக் கூடாது எனத்தெரிவித்தார். 

இதன்போது வடமாகாண சபை தொடர்பாக ஊடவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி பதில் அளிக்கும் போது,

இன்று தமிழ் மக்களின் பலத்தை சிதைப்பதற்காக பல சக்திகள் பல வடிவங்களில் ஊடுருவல் செய்து எங்கள் பலத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு நிகழ்ச்சி நிரல் தான் இந்த வடமாகாணசபையில் நிகழ்ந்த அமைச்சரவை மாற்றமும் வடமாகாண சபையில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற குழப்பமும். 

அதுமட்டுமல்ல இன்று இன்னும் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெருந்தொகையான பணத்தை இந்த அரசு வெளிநாடுகளில் இறைத்துக் கொண்டிருக்கிறது. போராட்ட சிந்தனையை சிதைப்பதற்காக இவை நடக்கிறது. 

அதன் ஒரு பகுதி தான் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் அரங்கேறியது. அத்தகைய குழப்பம் போன்றே வடமாகாணசபையிலும் நடந்தேறியுள்ளது. விரும்பியோ, விரும்பாமலோ நாம் சிலவற்றை அனுசரித்துக் போகின்றோம் நிச்சயமாக அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றார்.

இதன்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, 

எங்களுடைய பிரதேசங்களுக்கு 200 மில்லியன் நிதி தேவை என நாங்கள் கேட்கின்றோம். ஏன் நாம் அரசாங்கத்திடம் கேட்கக் கூடாது எங்களது பிரதேச அபிவிருத்திக்காக இன்னும் நிதியை நாம் பெற்றுக் கொண்டு அபிவிருத்தி செய்வோம். 

அண்மையில் 100 மில்லியன் ரூபாய்கான நிகழ்ச்சி நிரலை வழங்கியுள்ளேன். இன்று அதற்கான அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எமது மக்களது அபிவிருத்திக்காக அரசிடம் வாஙகிக் கொள்வது பிச்சையல்ல. நாங்கள் செலுத்தும் வரி.  அந்தப் பணத்தில் எமது பகுதி அபிவிருத்திக்கும் நிதி தேவை. இந்த விடயத்தில் சரியானதை தான் செய்கிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை எனக் காட்டுவதற்காக நாம் பணம் பெறுவதை விமர்சிக்கிறார்கள் என்றார். 

2 comments:

  1. இந்த தமிழ் பிரிவினைவாத அரசியல் கோமாளிகளுக்கு ஏதாவது முஸ்லிம் அரசியல்வாதிகளை காட்டி தான் மொக்கு தமிழர்களிடம் அரசியல் செய்ய வேண்டியுள்ளது. இல்லாத ஈழத்தை பேசி பேசி தங்கட சமுதாயத்திற்கு இந்த கோமாளிகளெல்லாம் உருப்படியாக இதுவரை எதுவுமே கிழித்ததில்லை.

    ReplyDelete
  2. முழு முஸ்லிம்களையும் வட மாகாணத்தில் இருந்து வெளியேற்ற வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றி அமுல்படுத்துவதட்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். ஆமை புகுந்த வீடு விளங்காதென்பது போல.....

    ReplyDelete

Powered by Blogger.