மகிந்த ஜனாதிபதி வேட்புமனுவை தாக்கல்செய்தால், தேர்தல் ஆணையாளர் அதனை நிராகரிக்க முடியாது
அமெரிக்க பிரஜை ஒருவருக்கு இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், அது பற்றி தொடர்ந்தும் பேசுவதில் பயனில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் களுத்துறையில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நான் குடும்ப அரசியலை விரும்பவில்லை. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட முடியும்.
முன்னாள் ஜனாதிபதி வேட்புமனுவை தாக்கல் செய்தால், தேர்தல் ஆணையாளர் அதனை நிராகரிக்க முடியாது.
தேர்தலுக்கு பின்னர் வழக்குகள் தொடரப்படலாம். அந்த வழக்குகள் விசாரித்து முடிக்கப்படும் போது, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருப்பார் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டை அரசாங்கம், கூட்டு எதிர்க்கட்சி மீது சுமத்தியுள்ளது சம்பந்தமாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள குமார வெல்கம,
கூட்டு எதிர்க்கட்சியில் அப்படியானவர்கள் இல்லை. அப்படி இருந்தால் எனக்கு தெரியும். கொலை செய்யக்கூடிய எவரும் இல்லை என தெரிவித்துள்ளார்.
Post a Comment