Header Ads



கர்ப்பிணி பெண் மருத்துவர், எப்படி இறந்தார்...?

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவில் பெல்லன்வில சிறிசோமரத்ன மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்று நேற்று மதியம் தீப்பற்றி எரிந்ததில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், அவரது கணவரும், மகனும் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில் தீ விபத்துக்கு காரணம் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

33 வயதான கர்ப்பிணி பெண் வைத்தியரே இந்த விபத்தில் உயிரிழந்தவர். அவரது கணவர் மற்றும் ஐந்து வயது மகன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கணவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ள களுபோவில வைத்தியர்கள், மகனின் நிலை தீவிரமாக இல்லை என குறிப்பிட்டனர்.

இரண்டு மாடி வீடான குறித்த வீட்டின் மேல் மாடியிலே தீப்பற்றியுள்ளது.

சம்பவத்திலிருந்து உயிரிழந்த வைத்தியர் ஹொரண அரசாங்க வைத்தியசாலையில் பணிபுரிந்துள்ளார். அவரது கணவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணியாற்றி வருகிறார்.

‘’வைத்தியரின் வீட்டுப்பக்கம் அலறல் சத்தம் கேட்டது. நான் அந்தப் பக்கம் ஓடியபோது வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.

வைத்தியரும் சின்ன குழந்தையும் தீயில் சிக்கியிருப்பதை அறிந்து கொண்ட நான் மேல் மாடிக்குச்செல்ல முயற்சித்தேன். அங்கு வீடு முழுவதும் புகையால் மூடப்பட்டிருந்ததால் முடியாமல் போய்விட்டது.

அவர்கள் அங்கு இருந்ததை அறிந்து நான் சத்தமிட்டேன். எனினும் அவர்களிடமிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.

தீயணைப்பு படையினர் வந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு பொலிஸாருடன் இணைந்து குறித்த வீட்டுக்குள் சென்றேன்.

அந்தநேரத்தில் வைத்தியர்கள் இருவரும் தங்கள் மகனை அணைத்துக்கொண்டு குளியலறையில் விழுந்து கிடந்ததை அவதானித்தேன்.

பொலிஸாரின் உதவியுடன் அவர்கள் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் பெண் மருத்துவர் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டோம் என அயல்வாசி ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.