திருமணத்திற்கு இனிமேல், அலரிமாளிகை வழங்கப்படாது - ரணில் உத்தரவு
அலரி மாளிகையில் எந்தவொரு திருமண நிகழ்வும் நடத்தப்படக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருமண மண்டபமாக அலரி மாளிகையை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு, பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன அலரி மாளிகையில் திருமணம் செய்து கொண்டார்.
சத்துரவின் திருமண நிகழ்வு தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இந்த திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்த திருமண மண்டபத்திற்காக 21 லட்சம் ரூபாய் பணம் சத்துர சேனாரத்ன வழங்கியிருந்தார்.
எனினும் அலரி மாளிகையில் நடந்த இறுதித் திருமணம் இதுவே ஆகும். இனி ஒரு போதும் அலரி மாளிகையில் திருமணம் நடத்த அனுமதிக்கப்படாதென பிரதமர் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Why? At least the Govt will get some revenue........
ReplyDelete