மனநிலை பாதிக்கப்பட்டவரே இலங்கை, பிரபலங்கள் கொலைச் சதியுடன் தொடர்புபட்டவராம்..!
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் 2000 ஆண்டு முதல் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முக்கிய தலைவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற சந்கேத்தின் பேரில் இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஊடகங்களில் வெளியான தகவல்களை பார்த்துள்ளதாக இந்திய தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து முக்கிய கவனம் செலுத்திய நாங்கள் இலங்கை அதிகாரிகள் வழங்கிய சிறிய தகவல்களை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நபரின் பின்னணி குறித்து ஆராயுமாறு இந்திய அதிகாரிகளை கேட்டோம் எனவும் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட தகவல்கள் குறிப்பிட்ட நபர் 2000 ஆண்டு முதல் மனோநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார் என்பதை உறுதி செய்துள்ளன எனவும் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இந்த தகவல்களை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ள தூதரக அதிகாரி முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Huh haa, nothing to wonder coz it's india.
ReplyDeleteeven we can buy MBBS cetrificate or more than that on behalf for this guy, not only that we can buy it for anyone who never really never traveled to india. coz that is india. Bloody Culprits trying to coverup a story.
Not only that.....
ReplyDeleteMahinda regime now good friend of Moadi, Subramaniyan & RSS...u know???