இரட்டைகோபுர தாக்குதல் எனும் பெயரில், அமெரிக்கா எனும் அரக்கன் காட்டிய திரைப்படம்
-எம்.ஐ.மொஹம்மட் சப்ஸாத்-
பாகிஸ்தானின் உதயத்திற்கு வித்திட்ட அதன் முதல் கவர்னர் முஹம்மது அலி ஜின்னா 1948 இல் இதே செப்டெம்பர் 11 இல் தான் இயற்கையெய்தியிருந்தார். தலித்களின் உரிமைக்குரலாக திகழ்ந்த தலைவர் இம்மானுவேல் சேகரனும் 1957 இல் இதே தினத்தில் தான் மரணத்தை தழுவியிருந்தார். இருபத்தி நான்கு மணிநேர சேவையில் ஈடுபடும் ஜேர்மனியின் முதலாவது தமிழ் வானொலியாக ஐரோப்பியத் தமிழ் வானொலி 2006 இல் தொடங்கப்பட்டதும் இதே தினத்தில் தான். வரலாறு இத்தினத்தில் பல சரிதங்களை சுமந்துள்ள நிலையிலும் செப்டெம்பர் 11 என்ற மறுகணமே உள்ளத்துள் தோன்றி கண்முன்னே ஓரச்சத்துடனான திகிலைக் கொண்டுவரும், சம்பவம் தான் செப்டெம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்.
உலக வரலாற்றை உற்று நோக்கும்போது சில போதுகளில் அது சில தனி மனிதர்களால் ஒரு புதிய போக்கிற்குட்படுத்தப்படும். இன்னும் சில சம்பவங்களும் அத்தகைய புதிய போக்கினுள் உலக வரலாற்றை இட்டுச் செல்லும். அத்தகைய சம்பவங்கள் வரலாற்றில் நிகழ்ந்தேறுகின்றபோது அவை ஏற்படுத்துகின்ற அதிர்வலைகள் அச்சம்பவங்களோடு மாத்திரமாக எல்லைப்படுத்தப்படுவதுமில்லை. பதினேழு ஆண்டுகள் கடந்தும் குறித்த தாக்குதல் சம்பவம் இவ்வுலக அரங்கில் ஏற்படுத்திய அதிர்வலைகளை தணிக்க முடியவில்லை என்பதே யதார்த்தம். எனவே அந்த தாக்குதலின் பின்னணி அது ஏற்படுத்திய அதிர்வலைகளிலிருந்து புரிந்துகொள்ளப்பட வேண்டியதும் அவசியமாகிறது.
2001 செப்டெம்பர் 11, அப்போது நேரம் காலை 8.46 மணி. உலக வர்த்தக மையத்தின் வட கோபுரம் தாக்கப்படுகிறது. தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து அந்த சூழல் மீண்டுகூட இருக்கவில்லை 9.03 மணியளவில் தென் கோபுரம் தாக்கப்படுகிறது. 9.37 மணியளவில் பெண்டகன் தாக்கப்பட்ட செய்தி வெளியாகிறது. 10.03 மணியளவில் ஷாங்ஸின் நிலப்பகுதியில் பிறிதொரு விமானம் வீழ்கிறது. உலகே எதிர்பார்த்திராத அமெரிக்கா மீதான அத்தகைய தாக்குதல் ஒரு குறுகிய நேரத்தில் நிகழ்ந்தேறி முடிகிறது.
2,973 பேர் அளவில் பரிதாபகரமாக உயிரிழக்கின்றனர். சம்பவ இடத்தில் 19,435 உடல் பாகங்கள் மீட்கப்படுகின்றன. 1.4 மில்லியன் தொன் எடையுள்ள குப்பை அங்கிருந்து அகற்றப்படுகிறது. உலக வரலாற்றில் இடம்பெற்ற கோரமான ஒரு தாக்குதல் அன்று நொடிப்பொழுதுகளுள் இடம்பெற்று முடிந்தது. தாக்குதல் இடம்பெற்று முடிந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கம் முடிவற்று தொடர்கிறது.
உலகே ஆடிப்போனது; நாமும் தாக்கப்படுவோமோ என்கிற அச்சம் நாடுகளிலெல்லாம் குடியேற அமெரிக்காவின் பதிலடியை உலகே எதிர்பார்த்திருந்தது. விசாரணைகள் ஆரம்பமாயின; ஒரு தலைப்பட்ச முடிவுகள் தீர்க்கமாயின; ஆவணங்களும் ஆதாரங்களும் சோடிக்கப்பட்டு அமெரிக்கா எதிர்பார்த்திருந்த ஒரு திட்டத்துக்கான அடிக்கல் நடப்பட்டது. எதிரி அறிவிக்கப்படுகிறார். தாக்குதல் இடம்பெற்ற சில நாட்களிலேயே குறித்த தாக்குதலுக்கான உரிமம் உஸாமா பின் லாதீனை தலைமையாகக் கொண்ட அல்கைதா மீது சுமத்தப்பட்டது.
இங்குதான் உலகும் அமெரிக்க குடிகளும் அறிவைக்காட்டிலும் உணர்வுக்கு முக்கியத்துவமளிக்கத் துவங்கியிருந்தார்கள். அத்தகைய இழப்பை யாராலும் ஜீரணிக்க முடியாது. ஆனால் அதற்காக ஓர் அப்பாவி அழிக்கப்படவும் முடியாது. தண்டிப்பதை விட முக்கியம், தண்டனை குற்றவாளிக்குத்தான் அளிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். உணர்வுக்கு முக்கியத்துவமளித்த உலகு அடுத்தடுத்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் மட்டும் தங்கி ஒரு வில்லனையும் உருவாக்கி அமெரிக்கா போரையும் தொடங்கிவிடத் துணை நிற்கிறது.
செப்டெம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்தே சில கருத்தாடல்கள் உலக அரங்கில் மிகப் பிரமாண்டமான பேசு பொருளாக்கப்பட்டன. ”இஸ்லாமிய தீவிரவாதம்", "இஸ்லாமிய அடிப்படைவாதம்" போன்ற சொல்லாடல்களுக்கு ஊடகங்களும் அதிக கரிசனை காட்டத் தொடங்கின. அருகில் தாடியுடனோ தொப்பியுடனோ ஒரு நபரைக் கண்டால் அவரும் அல்கைதாவைச் சேர்ந்தவராகவோ, தீவிரவாதியாகவோ முஸ்லிம் என்கிற ஒரு காரணத்திற்காக அவர் நோக்கப்படுகின்ற ஒரு மாயை உலக அரங்கில் தோற்றுவிக்கப்பட்டதில் செப்டெம்பர் தாக்குதலுக்கு உள்ள இடத்தை எந்த ஒன்றாலும் முந்திவிட முடியாது.
கலாசாரங்களுக்கிடையே மோதல் இடம்பெறப்போவதாக சாமுவேல் ஹன்டிங்டன் எழுதத் துவங்குகிறார். திரைப்படங்களுக்கெல்லாம் வில்லன்களாக ‘கான்'கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எங்கோ நிகழும் குண்டுவெடிப்புகளும் தாக்குதல்களிலும் சம்பந்தமேயில்லாத அயல்வீட்டு அப்துல்லாவுக்குள்ள தொடர்பை துப்பறிய ஏமாந்த சமூகம் மனப்பிரமை கொள்கிறது. அங்கிருந்து தொடங்கிய இத்தகைய காட்சிப்படுத்தல்கள் விஸ்வரூபமாக இப்போது வரை உருவெடுக்கத் தவறியதில்லை.
செப்டெம்பர் 11 தாக்குதல் அமெரிக்கா திரைப்படுத்திய ஒரு படம். அதன் பின்னால் திரையானது மாபெரும் திரைக்கதை என்கின்ற உண்மை புலப்பட எடுத்துக்கொண்ட நேர இடைவேளைக்குள் அமெரிக்கா தன் வள வேட்டைக்கான இரகசியத் திட்டத்தை நிறைவேற்றி முடித்திருந்தது. ’நாயைக் கொல்ல வேண்டுமானால் அதற்கு வெறி பிடித்தது என நம்ப வைக்கவேண்டும்' என்றொரு ஆங்கில பழமொழி கூறுகிறது. செப்டெம்பர் 11 தாக்குதல் விடயத்தில் அது மெய்ப்பிக்கப்பட்டதே உண்மை.
நோம் சோம்ஸ்கி குறிப்பிடுகின்றபோது, “உலக வளங்களின் மையமாக உள்ள மத்தியகிழக்கின் ஆளுகையை முதன்மைப்படுத்துவது மாறி மாறி வரும் அமெரிக்க அதிகார பீடத்துக்கு பொதுவான ஒன்று" என அடையாளப் படுத்தியுள்ளார். 2003 இல் உலக எண்ணெய் தேவையின் 15% வீதத்தை பூர்த்தி செய்த ஈராக்கின் எண்ணெய் வளத்தை சூறையாட 2003 இல் அமெரிக்கா அங்கு தொடங்கிய போரும் ஈராக்கிடம் இல்லாத அணுவாயுதத்தை இருப்பதாகக் கூறி ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பிஞ்சு உயிர்களை சூறையாடி, அதன் ஆட்சியாளர் சதாம் ஹுஸைனை முறையான குற்ற நிரூபித்தலுமின்றி தூக்கிலிட்டதும் இந்த திட்டமிடல் வரிசையில் இடம்பெற்றவையே.
ஆப்கான் வளங்களை சூறையாட, அதன் அதிகாரத்தை தன்னகப்படுத்த அதன் மீது போர் தொடுக்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருந்தது. உலக அரங்கில் ஒரு போர் நிகழ்வதை உலகு ஏற்க ஒரு காரணம் தேவையாக இருந்தது. அதற்காக அமெரிக்கா சோடித்த கதை செப்டெம்பர் தாக்குதலாக திரைப்படுத்தப்பட்டது. நயமான பெயர்களுடன் நாசகார பணிகளை முன்னெடுப்பதில் அமெரிக்காவிற்கு நிகர் அமெரிக்காவே.
அமெரிக்கா தன் எதிரிகளை அழிக்க சூட்டும் பெயர், “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”, உலக எண்ணெய் வளத்தை தன்னகப்படுத்த “கலாசாரங்களுக்கிடையான மோதல்", நாடுகளின் சுதந்திர ஒடுக்கலை நிகழ்த்த “சுதந்திரத்தைப் பாதுகாத்தல்", குடியேற்ற நாடுகளின் வளங்களை சூறையாட அவர்களை நாகரிகப்படுத்தும் போர்வையில் “வெள்ளைக்காரனின் பொறுப்பு" என அமெரிக்கா தன் ஒவ்வொரு நாசகார திட்டத்துக்கான நாசூக்கான பெயரை சூட்டிக் கொண்டிருக்கும்.
அத்தகைய வரிசையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனும் போர்வையில் ஆப்கானை தன்னகப்படுத்த அமெரிக்க மேற்கொண்ட சூழ்ச்சியை ஆதாரபூர்வமாக பல அமெரிக்கர்களே நிறுவியுமிருந்தனர். அமெரிக்க உள்நாட்டு ஆயுத பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய கேர்ட் செனென்பெல்ட் முன்வைத்த ஆதாரத்துடனான வாக்கு மூலத்தில் தாக்குதலுக்கு முற்கூட்டியே உலக வர்த்தக மையத்தில் இருந்த தங்கம், வெள்ளியாலான பெறுமதியான சொத்துக்கள் அகற்றப்பட்டமை, 6.5 வினாடிகளில் ஒரு 47 மாடிக்கட்டிடம் ஒரு இடத்தில் விமானம் தாக்க ஒரே நேரத்தில் முழுவதும் தரைமட்டமானமை, அதற்காக அனைத்து தளங்களிலும் அமெரிக்க அரசே குண்டு வைத்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
மேலும், டைலன் ஏவரி எனும் ஆய்வு மாணவன் முழு ஆதாரங்களுடன் வெளியிட்ட ”லூஸ் சேன்ஞ்ச்" எனும் ஆவணப்படத்தில் பல காரணிகளைக் கொண்டு அது அமெரிக்க சதியே என நிறுவியே இருந்தார். எந்த வெப்பநிலையிலும் உருகாத விமான கறுப்புப் பெட்டி எங்கும் இல்லாமை, தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்னரே லார்ரி சில்வெஸ்டைன் எனும் குறித்த கட்டடங்களை குத்தகைக்கு பெற்றிருந்த தொழிலதிபர் தீவிரவாத தாக்குதலுக்கான காப்புரிமை பெற்றிருந்தமை, அரசதரப்பு காட்டிய ஆவணங்களில் காட்டிய விமானத்தில் முப்பதாயிரம் அடி உயரத்திற்கு மேல் இருந்து பேசிய சாத்தியமே இல்லாத தொலைபேசி உரையாடல் என அனைத்து ஆவணங்களுடனும் குறித்த தாக்குதல் அமெரிக்க சதியே என நிறுவியுள்ளார். இன்னும் ஏராளமான அறிக்கைகளும் அது புஷ் தலைமையிலான அரசின் சதியே என்பதை தோலுரித்தன.
அதிகார மோகம், வளச் சுரண்டல் என அமெரிக்கா கொண்ட முதலாளித்துவ வெறி செப்டெம்பர் 11 எனும் திரைப்படத்தை அரங்கேற்ற இந்த உலகு கொடுத்த விலைதான் மிக அதிகம். போலியான காரணத்தை உலகுக்கு காட்டி நயவஞ்கமாக அமெரிக்கா, ஆப்கான் மீது நிகழ்த்திய கோரத் தாக்குதலில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கொல்லப்பட்டார்கள்; வளங்கள் சூறையாடப்பட்டன. அன்று தொடங்கிய மேற்கு ஊடகங்கள் இன்றுவரை இஸ்லாமோ போபியா பிரசாரங்களில் ஈடுபட்டுத்தான் வருகின்றன. அமெரிக்க வெறியும் அடுத்து ஈராக்கில் 12 இலட்சம் கொலைகளாக லிபியா, பாலஸ்தீன், சிரியாவாக இடங்கள் மத்திய கிழக்கை சூறையாடிய வண்ணம் தான் உள்ளன. செப்டெம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் எனும் பெயரில் அமெரிக்கா எனும் அரக்கன் காட்டிய திரைப்படம் திரைக்குப்பின் ஒரு திரைக்கதையுடன் தொடங்கிய வெறிகொண்ட வேட்டையின் கறுப்புத் துவக்கம்.
-Vidivelli
The project for New American century planned by George Bush, Donald Rumsfeld, Dick Cheney etc... to attack WTC.
ReplyDeleteயூத பயங்கரவாதிகளின் சதி. தாக்குதல் நடந்த நேரம் ஒரு யூதனும் அந்த கட்டிடத்தில் இருக்கவில்லை. அனைவரும் லீவு போட்டிருக்கிறார்கள் 11ம் திகதி செப்டம்பர் 2001
பொய்யை திரும்ப திரும்ப கூறுவதால் உண்மையாகி விடாது . இது அல் கைடா தான் செய்தது என்பது உலகத்துக்கே தெரியும் .இப்படியான கட்டுரைகள் மூலம் எதை நிரூபிக்க முயல்கிறார்களோ தெரியவில்லை .இன்னு கொஞ்சம் நாட்களில் ISIS என்று யாருமே இல்லை என்று கூறினாலும் ஆர்ச்சரியம் இல்லை .
ReplyDeleteகுமரா! உலகத்துக்கு அறிவித்தது யார்? அல் கைதா விற்கு ஆயுதம் வழங்கியது யார்? இற்கு ஆயுதம் வழங்கியது யார்? இற்கு ஆயுதம் வழங்கியது யார்? உலகிலே அதிகளவு ஆயுதங்கள் உற்பத்தி செய்பவர்கள் யார்? மற்ற நாடுகளின் வளங்களை சுரண்ட யுத்தம் செய்பவர்கள் யார்?
ReplyDeleteஅமெரிக்கா விற்கு வக்காலத்து வாங்குகிறார் தனி நாடு கிடைக்கும் என்ற நப்பாசையில், பாவம்.
நீங்கள் செய்த அநியாயத்திட்கு மக்களின் சாபம் வந்தே தீரும். அனுபவிக்கதான் வேண்டும்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா தென்பது, வல்லவன் வகுத்ததடா. குமரா! வருவதை எதிர்கொள்ளடா!