Header Ads



பாராளுமன்றத்திற்கு செல்லாவிட்டால், சம்பளத்தில் வெட்டு

வெளிநாடு செல்ல தடை, சம்பளம் குறைப்பு! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கை

நாடாளுமன்ற அமர்வுகளின்போது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்படவுள்ளது.

இதற்கான தீர்மானம் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாடாளுமன்ற அமர்வுகளின்போது கோரமின்மை காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதனைக்கருத்திற்கொண்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் யோசனையை முன்வைத்துள்ளார். இதனை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்துக்கு சமூகம் தராத நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களில் வெட்டுக்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 comments:

  1. அதுமட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிசொகுசு வாகனம்களை கொடுக்க கூடாது மற்றும் இராணுவம் படையினர்களின் எண்ணிக்கை கூடுதலாக குறைக்க வேண்டும் மேலும் அரசநிர்வாகனத்தின் செலவுகள் குறைக்க தனியார் மயம் இன்றியமையாதது.

    ReplyDelete
  2. Cutting the salary of the MPs is not going to work. Their major source of income comes from bribes and commissions.

    ReplyDelete

Powered by Blogger.