ஞானசாரருக்கு சிறுநீர், வெளியேறுவதில் தடை
நீதிமன்றினை அவமதித்த குற்றத்துக்கான 6 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்றுக் காலை மீண்டும் சுகவீனமுற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
நீதிமன்றம் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டபோது அவர் தனது சிறுநீரகத்தில் கல் ஒன்று உருவாகியுள்ளமை காரணமாக ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சத்திரசிகிச்சையின் பின்பு குறிப்பிட்ட கல் அகற்றப்பட்டது.
சில தினங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசார தேரர் கடந்த வாரம் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவர் ஒரு சிறைத்தண்டனை கைதி என்பதனாலேயே இவ் இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஞானசார தேரர் திடீரென சுகயீனமுற்றதால் மீண்டும் ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார் என பொதுபலசேனா அமைப்பின் ஊடகச் செயலாளர் எரந்த நவரத்ன தெரிவித்தார். ஞானசார தேரருக்கு சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கனத்தைக்கு அனுப்பி புதைத்துவிட்டால் தற்காலிகமாக கொஞ்சம் மக்கள் அமைதியடைவார்கள்.
ReplyDeletehe will go to Norway & Miyanmar for further medication....
ReplyDelete