Header Ads



எமது பேரணி தோல்வியென்றால், தேர்தலை சந்தியுங்கள் - அப்போது அரசின் தலைவிதி தெரியவரும்

பொது எதிரணியின் கொழும்பு ஆர்ப்பாட்டம் தோல்வியென அரசாங்கம் கருதினால் அரசாங்கம் பொதுத்தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொது எதிரணியினர் நேற்று கொழும்பில் நடத்திய  பேரணியே இலங்கையின் அரசியல்வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பேரணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பேரணி இடம்பெறுவதை தடுப்பதற்காக சதிநடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் நாங்கள் நினைத்ததை விட அதிகமாக சாதித்துள்ளோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பேரணி தோல்வி என தெரிவிக்கின்றது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மூலம் தனக்கு எதிரான அதிருப்தி தீவிரமடைவதை பார்த்த பின்னரும் அரசாங்கம் ஏன் அவ்வாறு தெரிவிக்கின்றது விளங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஆளும்கட்சியை தேர்தலிற்கு செல்லுமாறு  சவால் விடுக்கின்றோம் அதன் மூலம் அவர்களின் தலைவிதி தெரியவரும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Handover the country from One group of Thief to another group of Thief......

    ReplyDelete

Powered by Blogger.