இறக்குமதி செய்யும் பால்மாவில், பன்றி எண்ணெய் கலந்துள்ளது - அமைச்சர் விஜித் விஜயமுனி
இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றி எண்ணெய் கலந்திருப்பதாக கிராமிய பொருளாதார, மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் -05- கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றி எண்ணெய், மாட்டு கொழுப்பு, மரக்கறி எண்ணெய் போன்றன உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளை மக்கள் நுகராது உள்நாட்டு பால் மா மாற்றும் பாலை உட்கொள்ள பழகிக் கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவில் நாட்டை பாலில் தன்னிறைவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கின்றது என்பதை துறைசார்ந்தவர்கள் விளக்குவார்களா? சாதாரணமாக இது போன்றவர்களின் கருத்து வௌிப்பாடுகளில் மறைமுகமாக வர்த்தக கமிஷன் நோக்கங்கள் நிறைய உள்ளன. அதே நேரம் கடையில் கிடைக்கும் இந்த பால் மா வகைகளை பெரும்பாலான முஸ்லிம்கள் கண்ணை மூடிக் கொண்டு வாங்குகின்றனர். எனவே செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வௌியிடுவது முஸ்லிம்ககளுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் பயன்தரும் என நம்புகிறேன்.
ReplyDeletethereis vegitable oil in the milk.
ReplyDeleteதாய்நாட்டுப் பாலை விற்பதற்காய்
ReplyDeleteவெளிநாட்டுப் பால் குற்றம் என்பர்
அரசியல்வாதிகள் எதுவும் சொன்னால்
அப்படியானதுதான் அதனர்த்தம் என்பர்
தரப்படுத்தலை உறுதிப்படுத்தித் தந்த
தரச்சான்றிதழ் 'ஹலாலுக்கு' இணையேது?
அரசியல் வியாபாரிகள் வார்த்தைகளும்
ஆண்டவன் போதனைகளும் ஒப்பாகுமா?