Header Ads



டொலரின் குழப்பத்திற்கு விரைவில், முற்றுப்புள்ளி வைக்கப்படும் - ரணில்

-ருஸ்மானுல் ஹஸன்-

டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தளம்பலுக்கும் குழப்பத்திற்கும் விரைவில் நிரந்தரமான தீர்வு காணப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) தெரிவித்தார்.

அமெரிக்காவில் சர்வதேச முதலீட்டாளர்கள் பாரியளவில் டொலர்களை முதலீடு செய்து கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ளதனால் எமது நாட்டின் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நாத்தாண்டி, லூர்து மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழாவில் நேற்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார். வித்தியாலய அதிபர் பீ.எப்.பர்ணாந்து தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

"தற்போது உலக நாடுகளில் எண்ணெய் விலை அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் நாம் எமது நாட்டில் எண்ணெய் விலையை ஓரளவு கட்டுப்பாட்டில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றோம். எமது நாட்டில் எண்ணெய் உற்பத்தி கிடையாது. நாம் எண்ணெய்யை விலைக்கு வாங்குவதற்கும் டொலரையே செலுத்த வேண்டும்.

ஏற்றுமதியாளர்களும் டொலர்களை அமெரிக்காவிலேயே முதலீடு செய்து வருகின்றனர். ஏற்றுமதி வருமானத்தை ஒரே தடவையில் எமது நாட்டுக்கு அவர்கள் கொண்டு வருவதில்லை.இது எமக்கு பாரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இதனை நாம் கூடிய விரைவில் நிவர்த்தி செய்வோம்.

எமது ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. நாம் எமக்குத் தேவையான கூடுதலான எண்ணெய்யை ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்தே வாங்கி வந்தோம்.

இதற்கு இப்போது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனாலும் உலக நாடுகளில் எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது.

.டொலரின் பெறுமதி அதிகரித்து காணப்படுவது போன்று எண்ணெய்யின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 77.50 டொலராக இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டில் ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 45 டொலராக இருந்தது.

டொலரின் விலையும் எண்ணெய்யின் விலையும் அதிகரித்துள்ளதால் எமது நாட்டின் பொருளாதாரமும் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேபோன்று எமது மனைப் பொருளாதாரமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆனாலும், நாம் எமது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதியை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.அமெரிக்காவின் சுங்கப் பிரிவு, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பொருட்களுக்குச் சுங்க வரியை விதித்துள்ளது. இதே போன்று சீனாவும் ஜப்பானும் சுங்க வரியை அமெரிக்காவின் பொருட்களுக்கு விதித்துள்ளன.

இதனாலும் உலக நாடுகளில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து இருப்பதில்லை.இதிலிருந்து நாம் மீண்டு வருவதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். உலக நாடுகளில் பல நாடுகள் தற்போது பூகோள பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

எமது அயல் நாடான இந்தியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளும் அவற்றில் சிலவாகும்.தேசிய உற்பத்தி வருமானத்திலிருந்து ஆறு சத வீதத்தை கல்வி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கியுள்ளோம்.இது ஒரு போதும் குறைக்கப்பட மாட்டாது. எமது மாணவர்களின் எதிர்காலமே எமக்கு முக்கியமாகவுள்ளது எனக் கூறினார். நாத்தாண்டி, லூர்து மகா வித்தியாலயத்தில் சுமார் 85 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்ததுடன் புதிய தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் வித்தியாலயத்திற்கான வாத்தியக் கருவிகள்,விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கினார்.

2 comments:

  1. Mr. Wonder of Asia So far you did non to up lift the economy, but did well in talk service.

    ReplyDelete
  2. இலங்கை ரூபாவின் பெறுமதியும், பொருளாதாரமும் தொடர்ந்து விழும். இறக்குமதி பொருட்கள், இறக்குமதி raw materialகளை கொண்ட உள்ளூர் பொருட்கள் என்பன பலமடங்குகளாக விலைகள் அதிக்கரிக்கும். தொழில் வாய்ப்புக்கள் குறையும்.

    30வருட யுத்த ஆயுதங்கள், யுத்த விமாணங்கள், கப்பல்கள் வாங்கிய கடன்களே இன்னும் அடைக்கவில்லை. இந்த லட்சணத்தில மகிந்த அரசு சீன வங்கியொன்றில் அதிக வட்டியில் கடன் எடுத்து, 100%சீன பொருட்களை கொண்டு, 100%சீன தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து, புதிய ஏப்போட், துறைமுகம், பெரும்வீதிகள் (highways) காட்டினார்கள். இதில் முதல் இரண்டும் நட்டத்தில் இயங்குகின்றன. இப்போ புதிதாக கடன் வாங்கி அந்த பழைய கடன்களுக்கு வட்டி மட்டும் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த லட்சனத்தில், 85 மினிஸ்டர்கள் (cabinet+state+deputy). இதில் 95% முட்டாள்கள். இலங்கைக்கு திறமையும் கல்விதகமையுடைய 6 மினிஸ்டர்கள் போதுமானது.

    ReplyDelete

Powered by Blogger.