அணியை சரியாக, நான் வழிநடத்தவில்லை - பாகிஸ்தான் கேப்டன் வேதனை
தங்கள் அணியின் துடுப்பாட்ட வரிசை சொதப்பியது தான் தோல்விக்கு காரணம் என பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ஃபராஸ் அகமது வேதனை தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ண தொடரில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த 240 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான், 202 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறியது. தோல்விக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ஃபராஸ் அகமது கூறுகையில்,
‘மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. நாங்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒரு அணித்தலைவராக நானும் சரியாக ஆடவில்லை. நான் நன்றாக ஆடியிருக்க வேண்டும். எங்கள் வீரர்களும் நிறைவாக விளையாடவில்லை.
நான் அணியை சரியாக வழிநடத்தவில்லை என்றே நினைக்கிறேன். எங்கள் அணியின் துடுப்பாட்டம் சரியாக அமையவில்லை. பீல்டிங்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
அனைத்து விதத்திலும் எங்கள் அணி தோல்வி அடைந்துவிட்டது. பஹர் ஜமான் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவர் இந்த தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஷதாப்கான் காயமடைந்த நிலையில் விளையாடினார். இருந்தாலும் சிறந்த அணியை வெல்ல வேண்டும் என்றால் நாங்களும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும்.
துடுப்பாட்ட வரிசை சொதப்பியதுதான் வெளியேற காரணமாக அமைந்துவிட்டது. இது வருத்தமாகவே இருக்கிறது. ஷாகின் அப்ரிதி எங்களின் Plus point’ என தெரிவித்துள்ளார்.
இப்ப இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் தானாம் கடும் போட்டியாம், யார் அதிகமாக தோற்கும் அணி என.
ReplyDeleteசபாஷ் சரியான போட்டி!
நாடே இல்லாத நாடுகடந்த தமிழீழ அணி கிரிகட் எல்லாம் விளையாடுவதில்லையா? ஒன்லி தீவிரவாதம், பிரிவினைவாதம்,இனதுவேசம் மட்டும் தானா
ReplyDelete
ReplyDelete@info x, பாக்கிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடாக தற்போது இருப்பதால் தான் இதற்கு இந்த நிலமை, அங்கு ஒருவரும் போபதில்லை, இது தொடரும்..
அப்கானிஸ்தான் முன்னேறிவருவதற்கு காரணம் அங்கிருந்த தலிபான், அல்கைடோ போன்ற முஸ்லிம் பயங்கரவாத குழுக்களை அமேரிக்க கொன்றழித்து உதவியதால் தானே
ajan உண்மை தான் ஆனால் இலங்கை தமிழ் பயங்கரவாதிகளுக்கு இன்னொரு தீவிரவாதிகளை பற்றி விமர்சிக்க எதுவும் தகுதியுண்டோ. எவ்வளவு கேவலமாக பிரபாகரன் எனும் கொடூர பயங்கரவாதி செத்தானோ அதே போல் ஒவ்வொரு பயங்கரவாதிகளுக்கும் நடகும்
ReplyDelete