இந்துத்துவ நாடான இந்தியாவில், ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என பிரகடனம்
இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஐ ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
"இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்," என்று பிரிவு 377 கூறுகிறது.
விக்டோரியன் காலத்தின் இந்தச் சட்டப்பிரிவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் உள்ளது.
அக்டோபர் 2017ஆம் திகதி வரையிலான தகவலின்படி நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், தென்னாபிரிக்கா, நார்வே, சுவீடன், மெக்சிகோ, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், அர்ஜென்டினா, டென்மார்க், உருகுவே, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரேசில், பிரிட்டன், லக்ஸம்பர்க், அமெரிக்கா, பின்லாந்து, கொலம்பியா, ஜெர்மனி மற்றும் மால்டா ஆகிய 25 நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானதாக உள்ளது.
பிற நாடுகளில் அது சட்டவிரோதமானது.
பிபிசி
அரவாணிகளை போற்றும் நாடு இந்தியாவில் இதற்காகவே திரைப்படங்கள் வாயிலாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டன!!!!
ReplyDeleteஅவர்களின் உணர்வுக்கும் மதிப்பளித்து அரவணைப்பது தான் சமுதாய கடமை. ஒரு சாராருக்கு சார்பாக நடந்து கொள்ள இது ஒன்றும் அரபு தேசம் இல்லை
ReplyDeleteஅனு, இஸ்லாம் அரபு தேசத்திற்கு மட்டும் உரித்தானதல்ல. முழு மனித சமுதாயத்திற்கும் உரித்தானது. இது ஹிந்து மதத்தை அதன் கலாச்சாரத்தை நீங்களே அழிக்கும் செயல். கடைசியில் பழியை முஸ்லிம்களின் தலையில் போடுவது. தாங்களும் ஏன் தன்னினச்சேர்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றிர்கள்.
ReplyDeleteதங்களது மகனோ or மகளோ தன்னிச்சேர்க்கையாளராக இருப்பதை நீங்கள் விரும்புவீர்களா????