பொன்சேக்காவுக்கு நன்றி சொல்லும், முபாரக் மௌலவி
இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்திகள் வெறும் வதந்தி என்றும் இவை இனங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்க எடுக்கும் முயற்சி என்றும் பீல்மார்ஷல் சரத் பொன்சேகா கூறுயுருப்பதற்காக உலமா கட்சி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அண்மையில் சிங்கள மற்றும் தமிழ் இனவாதிகள் சிலர் முஸ்லிம்களிடம் ஆயுதம் இரும்கிறது என்றும் தீவிரவாதத்துக்கு தயாராகிறார்கள் என்றும் தீவிர பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது பற்றி ஜனாதிபதியோ பிரதமரோ மஹிந்த ராஜபக்ஷவோ நாட்டு மக்களுக்கு எத்தகைய உண்மைத்தன்மையையும் பகிரங்க்மாக சொல்லாமல் மௌனமாக இருக்கும் நிலையில் சரத் பொன்சேக்கா இக்கருத்துக்களை தொடர்ச்சியாக சொல்லிவருவது முஸ்லிம் சமூகத்துக்கு நிம்மதியான ஒன்றாகும்.
இந்த நாட்டு முஸ்லிம்களுக்கென ஆயுத ரீதியில் செயற்படக்கூடிய அளவு தனியான பிரதேசங்கள் எதுவும் இல்லை. சிங்கள பகுதிகளில் சிங்கள மக்களுடனும் தமிழ் பகுதிகளில் தமிழர்களுடன் கலந்தும் வாழ்கின்றனர். இந்த நிலையில் ஒரு சிறிய ஆயுத பயிற்சி எடுத்தாலும் அது நாட்டுக்கு தெரிந்து விடும். இந்த நிலையில் பிரபாகரனின் இடத்தை தேடிப்பிடித்து அவரைக்கொன்ற நமது நாட்டின் இராணுவத்துக்கும் அரசுக்கும் முஸ்லிம்களிடம் ஆயுதம் அல்லது புலிகள் தோல்வியை தாங்க முடியாமல் ஓடுகின்ற போது முஸ்லிம்களுக்கு விற்றதாக சொல்லப்படும் ஆயுதம் இருந்தால் அது தெரியாது போகுமா? இந்த அளவுக்கு இராணுவத்தை குறைத்து மதிப்பிட்டு சிலர் பேசும் போது அதற்கு பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேக்கா சரியான முறையில் பதில் தந்துள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
ஒருவர் தவறான கருத்தை தெரிவித்தால் அதனைக்கண்டிக்கும் நாம் சரியானதை தெரிவித்தால் அதற்கு நன்றியும் தெரிவிக்க வேண்டும்.
இந்த வகையில் சரத் பொன்சேக்காவுக்கு உலமா கட்சி நன்றி தெரிவிப்பதுடன் சகோதர முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் இயக்கங்களும் பகிரங்கமாக நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
Dear உல்மா கட்சி தலைவர் சார்,
ReplyDeleteசரத் பொன்சேகா ஜோக் விட்டவராம்.
அதை விடுங்கள், இலங்கை ISIS உறுப்பினர் ஒருவர் அவுஸ்திரேலிய பிரதமரையும், அப்பாவி மக்களையும் கொலை செய்யும் திட்டத்தோடு இருந்தபோது, அவுஸ்திரேலிய போலிசால் கைது செய்யபட்டது பற்றிய உங்கள் கருத்து என்ன?
அப்பாவி மக்களை கொலை செய்வதைப் பற்றி பேச உமக்கு எந்த அருகதையுமில்லை அஜன். நீரும் உமது கூட்டாளிகளும் சேர்ந்து ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது இந்த உலகம் அறியும். வீட்டுக்கொரு பயங்கரவாதி கொடுத்தவர்கள் நீங்கள். அவ்வாறு செய்துவிட்டு நீர் கோடானு கோடி முஸ்லிம்களில் சில நூறு பேர் அமெரிக்காவால் மூளைச்சலவை செய்யப்பட்டு ஆயுதமும் வழங்கப்பட்டு பயங்கரவாதிகளாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டதை அறிந்தும் அறியாதவனைப்போல் கொக்கரித்துக்கொண்டிருக்கிறீர். கேவலம்..
ReplyDelete