Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்தினர் கிளர்ந்தெழுவர் என எச்சரிக்கிறேன் - மேஜர் அஜித்

வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பனவை பதவியிலிருந்து விலக்கிவிட்டு அப்பதவியை பிரித்தானிய பிரபுக்கள் சபை உறுப்பினருக்கு வழங்கினால் அவர் இலங்கை இராணுவத்தினர் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பார். 

மேலும் அரசாங்கம் இராணுவத்தினர் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறது.  நாட்டில் இருபது இலட்சம் பேர் வரையிலான இராணுவத்தினர் உள்ளனர். எனவே அவர்கள் அனைவரும் எப்போதாவது அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். அந்த எழுச்சி எவ்வாறு அமையும் என்பதைத் சொல்ல முடியாதென சட்டத்தரணி  மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.  

“தாய் நாட்டுக்காக இராணுவத்தினர்” அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று -25- கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

(எம்.சி.நஜிமுதீன்)

1 comment:

Powered by Blogger.