இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் சிக்கவிருந்த விமானம், தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய வீரன்
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக விமான நிலையத்தில் இருக்கும் டிராபிக் கண்ட்ரோலர் தன்னுடைய உயிரைக் கொடுத்து நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
இந்தோனேஷியாவின் Sulawesi பகுதியில் சமீபத்தில் 7.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அப்போது Palu பகுதியில் உள்ள Mutiara SIS Al-Jufrie விமானநிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளை சுமந்து செல்லும் Batik Air Flight நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்துள்ளது.
இந்த விமான நிலையத்தில் Anthonius Gunawan Agung(21) என்ற நபர் டிராபிக் கண்ட்ரோலராக இருந்துள்ளார். விமானம் புறப்படு நேரத்தில் சிக்னல் காட்டுவதற்காக டவரின் நான்காவது தளத்தில் நின்றுள்ளார்.
நிலநடுக்கத்தை அறிந்த அங்கிருந்த ஊழியர்கள் பலர் உடனே ஓடியுள்ளனர். ஆனால் இவர் மட்டும் விமானம் புறப்படும் வரை சிக்னல் காட்டி விட்டு அதன் பின் நான்காவது தளத்தில் இருந்து குதித்துள்ளார்.
இதனால் அவரின் கால் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்துள்ளது. படுகாயமடைந்த அவர் உடனடியாக ஹெலிகாப்டர் உதவியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். விமானம் பாதுகாப்பாக புறப்படும் வரை இருந்து, பலரின் உயிரைக் காப்பாற்றிய அவரை அந்நாட்டு மக்கள் ஹீரோவாக பார்க்கின்றனர்.
Post a Comment