திருகோணமலை புவி அதிர்வு, அவதானத்துடன் உள்ளதாக புவிச்சரிதவியல் சுரங்கப் பணியகம் தெரிவிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் ஏற்பட்ட புவி அதிர்வின் பின்னர் மேலும் புவி அதிர்வு ஏற்படுமா என்பது தொடர்பில் அவதானத்துடன் உள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லகெலே, மஹகனதராவ மற்றும் ஹம்மன பகுதிகளில் 3.5 மற்றும் 3.8 ரிக்டர் அளவுகோளில் புவி அதிர்வு பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூதூரில் ஆரம்பத்தில் உணரப்பட்ட புவி அதிர்வு பின்னர் தோப்பூர், குச்சவெளி, தம்பலகாமம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பிரதேசங்களில் சிறிது நேர இடைவெளியில் உணரப்பட்டுள்ளது.
மேலும், நிலாவெளி, உவர்மலை, மனையாவெளி, வீரநகர் பிரதான வீதி, தம்பலகாமம், ஈச்சலம்பற்று, மூதூர், கட்டைப்பறிச்சான், திருக்கடலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் புவி அதிர்வு உணரப்பட்டுள்ளது.
அதேபோல், நேற்று நள்ளிரவு 12.35 மணியளவில் இந்து சமுத்திரத்தின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்டிய பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவில் புவி அதிர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 2:209)
www.tamililquran.com