ஓரினச் சேர்க்கை பற்றி, இஸ்லாத்தின் எச்சரிக்கை
'உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கின்றீர்களா? இல்லை. நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கின்றீர்கள்.' என்றும் கூறினார்.
'லூத்தே! நீர் விலகிக் கொள்ளா விட்டால் வெளியேற்றப் படுவோரில் நீரும் ஒருவர்!'என்று அவர்கள் கூறினார்கள்.
'உங்கள் செயலை நான் வெறுப்பவனே!' என்று அவர் கூறினார்.
'என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக என்றும் கூறினார்.
26 : 165,166,167,168,169 - குர்ஆன்.
தன் சமுதாயத்து மக்களிடம் ஓரினச் சேர்க்கையான இந்த பெரும் பாவத்தை விட்டுவிடும்படி பிரச்சாரம் செய்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. 'இந்த பிரச்சாரத்தை விட வில்லை என்றால் உம்மை ஊரை விட்டு வெளியாக்குவோம்' என்றும் அந்த மக்கள் கூறினர்.
'உங்கள் விஷயத்தில் எனக்கு சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?'என்று அவர் கூறினார்.
'லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்.அந்த மக்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக் கெடு வைகறைப் பொழுது.வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'என்றனர்.
11 : 80,81 - குர்ஆன்.
லோத்தின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அந்த ஊரை அழிப்பதற்காக இரண்டு வானவரை அனுப்பினான்.
'அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல மழை பொழிந்து அவ்வூரின் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் நீங்கள் சென்று வரும் நிலையான சாலையில்தான் உள்ளது. '15 : 74,75,76 - குர்ஆன்
இறைவனின் கோபத்திற்க்குள்ளான அந்த ஊர் இன்றும் ஜோர்டானில் சபிக்கப் பட்டதற்கான அடையாளங்களோடு செத்த கடல் என்று சொல்லப் படும் (Dead Sea) யை ஒட்டி அமைந்திருப்பதைக் காணலாம். இந்த கடல் பிரசேத்தை அரபியில் 'பஹ்ரல் மௌத்' என்று சொல்வார்கள்
Post a Comment