கூட்டு எதிரணிக்குள் மஹிந்த - கோட்டா அணியென 2 பிளவுகள்
கூட்டு எதிரணிக்குள் தற்போது மஹிந்த அணி , கோட்டா அணியென இரு பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக ஜே. வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க கூறினார்.
மஹிந்த மீண்டும் நாட்டின் தலைவராவதை எப்படியும் தடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ள நிலையில், கோட்டா அணி 20 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு எதிராக செயற்பட்டது.
தற்போது இவ்விரு அணிகளும் தத்தமது தரப்புத் தலைவர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலே இறங்கியுள்ளன.
மல்வத்தை பீடாதிபதியை கண்டியில் சந்தித்து ஆசி பெற்ற அநுரகுமார திசாநாயக்க, 20 ஆவது திருத்த சட்டம் தொடர்பாக விளக்கமளித்தார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டால் மக்கள் அங்கீகாரத்தின் மூலம் மஹிந்த அமைச்சரவையின் தலைவராகலாம்.
இவ்வாறான நிலை ஏற்பட்டால், கோட்டாவின் கனவுகள் தகர்ந்து விடும். இதன்மூலம் மஹிந்த அணியில் தலைமைத்துவ போட்டி வலுத்து சிக்கல் நிலை ஏற்படும். 20 ஆவது திருத்தச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டால் பாராளுமன்றம் அடுத்த வருடம் மார்ச் 09 ஆம் திகதிக்கு முன்னர் கலைக்கப்படவேண்டும். அந்த நிலையில் புதிதாக பொதுத் தேர்தல் நடத்தப்படலாம். இவ்வாறு இடம்பெறுமானால் ரணிலின் இந்த அரசாங்கத்தின் காலம் 7 மாதங்களால் குறையும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறினார்.
Post a Comment