என்னை முடிந்தளவு திட்டுங்கள், அப்பாவி வீரர்களை ஏச வேண்டாம் - பைஸர் முஸ்தபா
கிரிக்கெட் விளையாட்டின் வெற்றி, தோல்வி இரண்டினதும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
போட்டி தோல்வியடையும் போது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முடிந்தளவு திட்டுங்கள். ஆனால், அணியின் அப்பாவி வீரர்களை யாரும் ஏச வேண்டாம் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய கிரிக்கெட் அணியின் பின்னடைவு குறித்து மாத்தறை மாவட்ட எம்.பி. காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கையில் விளையாட்டுத் துறை அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
எந்தவொரு விளையாட்டினதும் வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்வது மனிதத் தன்மையாகும். எமது கிரிக்கெட் வீரர்கள் ஆப்கானிஸ்தானிடமும் பங்களாதேசிடமும் தோல்வியடைந்தமைக்காக இலங்கை கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது எனக் கூற முடியாது. எமது கிரிக்கெட் வீரர்களின் திறமையை இரண்டு போட்டிகளை வைத்து மட்டிட வேண்டாம்.
சமூக வலைத்தளங்களில் தலைகால் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களுக்கு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. இதனால், கிரிக்கெட் வீரர்களின் மனோநிலை பாதிப்படைகின்றது. அரசியல் என்பது வேறு, கிரிக்கெட் என்பது வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த அரசியல்வாதிகளால் தான் இலங்கை அணிக்கு இந்த நிலமை. திட்ட கூடாது, அடி போடவேண்டும்
ReplyDeleteஇலங்கையர்கள் வெல்ல வேண்டியது பண்பாட்டிலேயே, விளையாட்டைவிட!
ReplyDeleteCorrect said Mr Faisar mustafa
ReplyDelete