இலங்கையில் நடந்த, உன்னதமான நிகழ்வு
இலங்கையில் அடித்துக் கொல்லப்பட்ட யானை ஒன்றுக்கு சக யானைகளினால் இறுதி அஞ்சலி செலுத்திய அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கலாவெவ தேசிய பூங்காவில் இருந்த பாரிய காட்டு யானை ஒன்றை இன்றுமொரு யானை தாக்கி கொலை செய்துள்ளது.
கொலை செய்யப்பட்ட காட்டு யானை, யானை கூட்டங்களுக்கு தலைமைத்துவம் வழங்கியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலா வெவ தேசிய பூங்காவில் 300 யானைகள் உள்ளன. அங்கு யானை குழுக்கள் சிலவற்றிற்கு தலைமைத்துவம் வழங்கிய இந்த யானை, கடந்த சில நாட்களாக வேறு ஒரு யானையுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அந்த யானை உயிரிழந்துள்ளது.
இந்த யானை உயிரிழந்ததனை தொடர்ந்து, ஏனைய யானைகள் அந்த இடத்தில் கூடி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளன.
மனிதர்களைப் போன்று மிருகங்களுக்கு இடையில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது மிகவும் அபூர்வமானது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment