டிரம்புடன் பேசவுள்ளாரா மகிந்த..?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பினை அமெரிக்கா வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சந்திப்புக்கான உத்தியோகபூர்வ தினத்தினை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விரைவில் அறிவிக்கும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவுக்கு செல்லவுள்ள மஹிந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக மறைமுகமாக மஹிந்த அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கோத்தபாயவின் அரசியல் செயற்பாடு குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை - அமெரிக்க பிரஜாவுரிகளை கொண்டவர் என்பதால், டொனால்ட் ட்ரம்புடனான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பசப்பு வார்த்தைகளுக்கும் படுபொய்களுக்கும் பின்னால் மிகவும் பாரதூரமான விடயங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானது இந்த ஆட்டம் காணும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தைப் பயமுறுத்துவதும்,இந்த நாட்டின் நீதித்துறைக்கு நான் வரப்போகிறேன்,எனக்கு எதிராக தீர்ப்புகள் வழங்க யோசனைகள் இருந்தால் நீங்கள் கடும் கஷ்டத்தில் மாட்டிக் கொள்வீர்கள் என்ற ஒரு phobia psychosis ஏற்படுத்தவதுதான் இந்த கள்ளன் பரப்பும் செய்திகளின் உள்நோக்கம். அதுதவிர இலங்கை போன்ற ஒரு நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை மடக்கி அடிமைச்சங்கி போட்டுவைக்கும் உபாயம் அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். எனவே இங்குள்ள தனக்குத் தேவையானவைகளச் சுரண்ட அமெரிக்கா சுமார் 30 வருடங்களுக்கு முன்பு போட்ட திட்டங்களை படிப்படியாக இப்போது அமல்படுத்தி வருகின்றது. அதற்கு யாரும் தடையில்லை என்பதை அந்த துரோகி அமெரிக்காவுக்கு நன் கு தெரியும்.
ReplyDelete