Header Ads



நாளை வியாழக்கிழமை, ஆட்சியேற்கத் தயார் - மகிந்த அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அனைவரும் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும். தன்னிடம் ஆட்சிப் பொறுப்பை நாளையே வழங்கினாலும், தான் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று -26- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், மரணப் பயத்தை ஏற்படுத்தி தான் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதை எவராவது தடுக்க நினைப்பார்களாயின் அது தவறானது எனக் கூறிய அவர், தனது பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

1 comment:

  1. "Democratic Protocol" என்ற ஒரு அம்சம் நடப்பு அரசியலில் காணப்படுகின்றது. தற்போதைய இலங்கையின் அரசியல் அமைப்பை வடிவமைத்தவர்கள் ஒரு விதிமுறையினை குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் வகுத்திருந்தனர். இது இலங்கையில் மாத்திரம் அல்ல சர்வதேச மட்டத்தில் சிறப்பாக ஐக்கிய அமெரிக்காவையும் மற்றும் பல அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளையும் உதாரணமாகக் கொள்ள முடியும். தான் பதவியில் தொடரவேண்டும் என்பதற்காக அரசியல் அமைப்பில் மாற்றத்தைக் கொணர்ந்து பின்னர் அதன் காரணமாகவே மக்களால் துரத்தியடிக்கப்படுவது என்பது கேவலமான அரசியல் பிழைப்பாகும். இலங்கையின் சனாதிபதியாக வருவதற்கு எத்தனையோ அறிவாளிகள் தரவரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவரவரது சேவைக்காலம் முடிந்தால் பதவியை விட்டு கண்ணியமான முறையில் நீங்கி ஓய்வெடுத்திடல் வேண்டும். சந்திரிக்கா அம்மையார் இதற்கு ஒரு முன்னுதாரணம்.

    ReplyDelete

Powered by Blogger.