ஓரினச்சேர்க்கையை மெல்கம் ரஞ்சித் எதிர்த்தமையால், மங்கள சமரவீர அவரை சாடுகிறார் - சிங்கள ராவய
ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டப் பிரிவை இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகையில், அதற்கு முற்று முழுதான எதிர்ப்பை காட்டியமையினாலேயே அண்மையில் மெல்கம் கர்தினால் ரஞ்சித், அமைச்சர் மங்கள சமரவீர கடுமையாக சாடியிருந்தார்
என சிங்கள ராவய பொதுச் செயலாளர் மகல்கந்தே சுகத்த தேரர் தெரிவித்தார்.
மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்த கூற்று தொடர்பில் பொதுபல சேனாவின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் இன்று பொதுபலசேனாவின் தலைமைக்காரியாலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய தேரர் கருத்து தெரிவிக்கையில்,
ஓரினச் சேர்க்கையை அனுமதித்து ஏற்றுக்கொள்வதாக சட்டப் பிரிவை மாற்ற முயற்சிக்கையில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை கடுமையாக எதிர்த்தார். இந்த சம்பவத்தை மனதில் வைத்து பலி தீர்க்கும் நோக்குடனேயே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனை நாம் மதத்தலைவர்கள் என்ற ரீதியில் கடுமையாக எதிர்க்கின்றோம். இவ்விடயம் குறித்து கத்தோலிக்க மதத்தினரும் கத்தோலிக்க சபையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருக்கும் அனைத்து எதிர்ப்பு போராட்டங்களுக்கும் எமது முழுமையான ஆதரவினைத் தருவோம் என்றார்.
Post a Comment