சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில், வெளியாகி வரும் வதந்திகளில் உண்மையில்லை
சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் வெளியாகி வரும் வதந்திகளில் உண்மையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுனாமி ஏற்படப் போவதாக பரவி வரும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவித்துள்ளது.
இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்பில் உன்னிப்பாக தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் காலி – கொழும்பு பிரதான வீதியின் அம்பலன்கொட அகுரல முதல் தொட்டகமுவ வரையிலான பகுதியில் கடற் அலைகள் வீதி வரையில் வந்த வண்ணம் காணப்படுகின்றது.
நாளை வரையில் பாணந்துறை முதல் காலி, ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதிகளின் கடல் பகுதிகளில் 2 தொடக்கம் 2.5 மீற்றர் உயரத்திற்கு அலை அடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், நாட்டில் சுனாமி அச்சுறுத்தல்கள் எதுவும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தோனேசியாவில் நேற்று இடம்பெற்ற நில அதிர்வினைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment