Header Ads



புல்மோட்டையில் பௌத்த பிக்கு அடாவடி - முஸ்லிம்களின் காணிகளை பிடிப்பதில் குறி


புல்மோட்டை 13ம் கட்டை குஞ்சுக்குளம் பகுதியில் 1966 ம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு விவசாயம் மேற்கொண்டு வந்த நிலங்கள் கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் மீண்டும் மக்கள் போகமுடியாத நிலை இதற்கிடையில் புல்மோட்டை அரிசிமலை பௌத்த பிக்குவினால் கடந்த மாதம் குறித்த பகுதிக்குள் பௌத்த சமய பாடசாலை அமைப்பதற்காக கொழும்பு வன பரிபாலன அதிகாரிகளால் வன பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான என கூறி குறித்த அனுமதி பத்திர காணிக்குள் 80 பேஜ் காணியை வழங்கிய கடித்ததோடு கடந்த சில நாட்களுக்கு முன் டோசர் இயந்திரமூலம் காணிகளை துப்பரவு செய்ய முட்பட்ட வேளை காணி சொந்த காரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது

நேற்று 28.09.2018 மீண்டும் இயந்திரத்தை கொண்டு துப்பரவு செய்யப்பட்ட வேளை காணி சொந்தக்காரர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பள்ளி தலைவர்கள் பிரதேச வாசிகள் குறித்த பகுதிக்கு சென்ற வேலை இரு சாராருக்குமிடையில் பதற்றம் ஏற்பட்டு காணி சொந்தக்காரர்கள் கொட்டகை அமைத்து இரவு தங்கியிருந்த வேலை காலை 3.30 மணியளவில் பௌத்த மதகுருவும் சில பெரும்பான்மையினரும் குறித்த பகுதிக்கு சென்ற வேலை முறுகல் ஏற்பட்டது.

 பின்னர் பொலிஸார் குவிக்கப்பட்டு கலக்கம் அடக்கும் பொலிஸார் மேலதிகமாக திருகோணமலையில் இருந்து வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர் 

பின்னர் குறித்த பகுதிக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் தவிசாளர் முன்னாள் உதவி தவிசாளர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர்,மாவட்ட பொலிஸ் மா அதிபர்,குச்சவெளி பிரதேச செயலாளர்,பொலிஸ் உயர் அத்தியட்சகர் புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் குறித்த பகுதியில் கலந்துரையாடியதை அடுத்து இரு சாராரும் வெளியேற்றப்பட்டு அரசாங்க அதிபரால் தடை செய்யப்பட்டு பொலிஸ் மாவட்ட பொறுப்பதிகாரிக்கு அப்பகுதிக்குள் முழுமையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க பணித்துள்ளார் அதனை இது விடயமாக ஜனாதிபதியின் தொழிநுட்ப பகுதிக்கு அழைக்கப்பட்டு ஆராயப்படும் எனவும் இது விடயமாக நியாயமான தீர்வு பெற்றுத்தரப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்

மக்கள் அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட பொலிஸ் மா அதிபர் இடத்தில் தொடர்ந்தும் குறித்த பிக்குவினால் கிராமத்தில் பிரச்சினை ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்

1 comment:

  1. அனுமதிபத்திரம் என்பது காணி உறுதி அல்ல.

    அந்த காலத்தில் காடுகளை வெட்டி விவசாயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி பத்திரம் வழங்கியிருந்தார்கள். ஏதாவது ஒரு காரணத்தால் விவசாயம் செய்யமுடியாவிட்டால், அந்த அனுமதிபத்திர காலம் முடிவு பெற்றுவிடும். இதை சட்டபடி உரிமைகோர முடியாது.
    பின்னர் இன்னொரு தேவைக்காக அரசாங்கம் இன்னொருக்கு இந்த காணியை கொடுக்க முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.