முஸ்லிம் மாணவர்களின், போராட்டத்திற்கு பொலிஸார் தடை
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயத்தில் நாளை (18) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு குச்சவெளி பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
புடவை கட்டும் பிரதேசத்திலுள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நிறுத்துமாறு குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளதாக புடவைகட்டு பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயத்தில் 300 மாணவர்கள் கல்வி பயின்று வரும் பாடசாலையின் 07 ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மிகுதியான ஆசிரியர்கள் அனைவரையும் நியமித்து தருமாறு கோரியே இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனாலும் எதிர்வரும் இருபதாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளப்படவிருக்கின்ற காலகட்டத்தில் எதுவித ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்க வேண்டாமென நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் புடவைகட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.
நீதிமன்றம் விடுத்த கோரிக்கையை அடுத்து புடவை கட்டு மக்களால் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்களால் நடத்தப்படவிருந்த அடைப்பு போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்தை போன்று பொலிஸார் புடவைகட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சு உடன் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிப்பது போன்ற பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமிக்க கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் சிறார்களின் கல்வியில் அதிகளவில் அக்கறை கொண்டுள்ள நிலையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புடவைகட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து சிறார்களின் கல்வியில் அக்கறை காட்ட வேண்டும் எனவும் புடவைக்கட்டு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Post a Comment