Header Ads



ஜனாதிபதி கொலை சதி சந்தேக இந்தியர் பற்றி, அவரது குடும்பத்தினர் தெரிவிப்பது என்ன..?

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற  சந்தேகத்தின்  கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள  மார்செலி தோமஸ் என்ற இந்தியர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது சகோதரர் பின்னி தோமஸ்தெரிவித்துள்ளார்.

எனது சகோதரர் இரண்டு முறை விபத்தில் சிக்கியவர் இதன் காரணமாக அவரது வலது கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனது சகோதரர் நீர்கொழும்பில் வசித்து வந்தவர் உணவிற்கு வழியில்லாததால் அவர் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் எனவும் பின்னி தோமஸ் தெரிவித்துள்ளார்.

எனது சகோதரரிடமிருந்து கடந்த 18 ம் திகதி அழைப்பு வந்தது நான் வேறுவேலையில் கவனமாகயிருந்ததால் அதனை கவனிக்கவில்லை  அதன் பின்னர் நான் மீண்டும் அவரை தொடர்புகொள்ள முயன்றவேளை என்னால் அவரை தொடர்புகொள்ள முடியாமல் போய்விட்டது என பின்னி தெரிவித்துள்ளார்.

நாங்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் எனது சகோதரர் விமானநிலைய அதிகார சபையில் பணிபுரிந்தார் அவ்வேளையே அவர் தன்னை கொல்வதற்கான முயற்சிகள் குறித்து அச்சமடைந்திருந்தார் இது குறித்து அதிகாரிகளிற்கும் கடிதம் எழுதியிருந்தார் என தெரிவித்துள்ள பின்னி அந்த அச்சம் காரணமாகவே அவர் இலங்கைக்கு வந்திருக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

 எனது சகோதரரின் மனைவி கேரள விமான நிலையத்தில் பணிபுரிகின்றார்  விபத்துக்களை தொடர்ந்து எனது சகோதரர் உளநிலை பாதிக்கப்பட்டதால் சகோதரரை  அவர் விவகாரத்து செய்து விட்டார் எனவும் பின்னி தெரிவித்துள்ளார்.

எனது சகோதரர் உளவியல் பிரச்சினைகள் உள்ளவர் அவர் தன்னை யாரோ கொன்றுவிட்டு தனது சொத்துக்களை திருட முயல்வதாக தெரிவித்திருந்தார் எனவும் பி;ன்னி தெரிவித்துள்ளார்.

எனது சகோதாரர் எங்கு சென்றாலும் தனது வீட்டின் உறுதியை கொண்டு செல்வது வழமை அவர் அதனை இலங்கைக்கும் கொண்டு வந்திருக்கலாம், அவரிற்கு ஒரு 18 வயதில் இருக்கின்றார்  எனவும் பின்னி தெரிவித்துள்ளார்.

எனது சகோதரர் தொழில்வாய்ப்புகளை தேடி 2017 இல் இலங்கை சென்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர் என்னையும் இலங்கைக்கு வருமாறு அழைத்தார் நான் மறுத்துவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.