Header Ads



அமெரிக்காவில் நின்று, சவூதிக்கு எதிராக கட்டார் போர்க்கொடி


எண்ணெய் வள­மிக்க பார­சீக வளை­குடா நாடான கட்­டா­ருக்கு எதி­ராக சவூதி அரே­பியா தலை­மையில் விதிக்­கப்­பட்­டுள்ள இரா­ஜ­தந்­திர மற்றும் பொரு­ளா­தாரத் தடை­களை சாடிய கட்டார் நாட்டின் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாட் அல்-­தானி, அது அப்­பட்­ட­மாக சர்­வ­தேச சட்­டத்தை மீறும் செய­லாகும் எனவும் வரு­ணித்­துள்ளார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நியூ­யோர்க்கில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச்­சபைக் கூட்­டத்தின் 73 ஆவது அமர்வில் உலகத் தலை­வர்கள் மத்­தியில் உரை­யாற்­றிய ஷெய்க் தமீம் இந்தத் தடைகள் அரபு நாடு­களை செய­லி­ழக்கச் செய்­துள்­ள­தோடு அற்ப வேறு­பா­டு­க­ளுக்­காக எமது பிராந்­தி­யத்தில்  எமது நாடு பணயம் வைக்­கப்­பட்­டுள்­ளது எனவும் தெரி­வித்தார்.

நிபந்­த­னை­யற்ற பேச்­சு­வார்த்­தைக்கு டோஹா எப்­போதும் தயா­ராக உள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாகக் குற்­றம்­சாட்டி சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு அமீ­ரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கடந்த வருடம் ஜூன் மாதம் 05 ஆந் திகதி கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திரத் தொடர்­பு­களைத் துண்­டித்­தன.

சவூ­தியின் அனு­ச­ர­ணை­யுடன் இயங்கும் முன்னாள் யெமன் ஜனா­தி­பதி அப்துல் ரப்பு மன்சூர் ஹாதியின் நிரு­வாகம், லிபியா, மாலை­தீவு, டிஜி­போட்டி, செனகல் மற்றும் கொமொரோஸ் என்­பன இரா­ஜ­தந்­திரத் தொடர்­பு­களைத் துண்­டித்த அணியில் பின்னர் இணைந்­து­கொண்­டன. ஜோர்தான் தனது இரா­ஜ­தந்­திரத் தொடர்­பு­களைக் குறைத்­துக்­கொண்­டது.

பின்னர் கட்டார் வெளி­நாட்­ட­மைச்சு இரா­ஜ­தந்­திரத் தொடர்­பு­களைத் துண்­டிப்­ப­தற்­கான தீர்­மானம் நியா­யப்­ப­டுத்த முடி­யா­தது எனவும் பிழை­யான கரு­து­கோள்­களின் அடிப்­ப­டை­யிலும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும் எனவும் தெரி­வித்­தி­ருந்­தது.

கடந்த 2017 ஜூன் 9 ஆம் திகதி டோஹா­வுடன் தொடர்­பு­களைப் பேணு­வ­தாகத் தெரி­வித்து சவூதி அர­சாங்­கமும் அதன் நட்பு நாடு­களும் டசின் கணக்­கான தனி­ந­பர்கள் மற்றும் சொத்­துக்­களை கறுப்புப் பட்­டி­யலில் சேர்த்­ததை தொடர்ந்து பயங்­க­ர­வா­தத்­திற்கு உத­வு­வ­தாக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டினை கட்டார் முற்­றாக மறுத்­தது.

அந்த மாதத்தின் பிற்­ப­கு­தியில் சவூதி அரே­பி­யாவும் அதன் தோழமை நாடு­களும் இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை மீள சீர்­செய்ய வேண்­டு­மானால் அல்-­ஜெ­ஸீரா தொலைக்­காட்சி வலை­ய­மைப்பை மூடு­வது, ஈரா­னு­ட­னான உற­வு­களைக் குறைத்­துக்­கொள்­வது உள்­ளிட்ட 13 அம்ச நிபந்­த­னை­களை முன்­வைத்­தன.

சவூதி அரே­பியா, எகிப்து, ஐக்­கிய அரபு அமீ­ரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடு­களின் நிபந்­த­னைகள் அடங்­கிய ஆவ­ணத்தில் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பு, லெப­னானின் ஹிஸ்­புல்லாஹ் அமைப்பு ஆகி­ய­வற்­று­ட­னான தொடர்­பு­களை கட்டார் துண்­டிக்க வேண்டும் எனவும் கோரப்­பட்­டி­ருந்­தது. நியா­ய­மற்­றவை எனத் தெரி­வித்து கட்டார் அந்த நிபந்­த­னை­களை நிராகரித்தது என்றார்.

 M.I.Abdul Nazar

2 comments:

  1. Saudilacks diplomatic skills to deal with many cpictures ..
    HOW on earth Saudi become enemies of ME countires .
    HOW Many enemies sauidi has now ..
    Iran; Syria ; yemon ; Lebanon; Qatar; Turkey and one one it will lose support of half of Muslim world ?

    ReplyDelete
  2. GULF COUNTRIES ARE FIGHTING EACH OTHERS FOR POINTLESS ISSUES BUT THEY ALL FORGET THAT ALREADY THEY ALL IN ILLUMINATES CONTROL!
    (EXP. US BIG BASE IN QATAR, MAJOR SHARE HOLDERS OF QR AIRWAYS NOT SHIEKS,JUST FOR A FOOT BALL GAME THEIR WASTING TRILLION $, QATAR'S NATIONAL SECURITY SYSTEM CONTROL BY US, ETC..)

    ReplyDelete

Powered by Blogger.