இலங்கைக்கு தென்மேற்கே இன்று நிலநடுக்கம் - மக்கள் அச்சமடையத் தேவையில்லை
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சிறிலங்காவுக்கு தென்மேற்கே இன்று காலை 11.43 மணியளவில் 5.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி துறைமுகங்களில் இருந்து, 3700 கி.மீ தொலைவில் உள்ள கடல் பகுதியிலேயே இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இலங்கைத் தீவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், சிறிலங்கா காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் வளிமண்டளவியல் திணைக்களத்தின் அதிகாரி மொகமட் சாலிஹின் தெரிவித்துள்ளார்.
Post a Comment