இட்லிப்பில் ரத்தம் சிந்துவதை தடுக்க, துருக்கி விடுத்த போர் நிறுத்தத்தை புதின் நிராகரிப்பு
சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் மீது புதிய தாக்குதலை ரஷ்யா தொடங்கியுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இட்லிப் மாகாணத்தின் தென் மேற்கில் கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இது கூறியுள்ளது,
சிரியாவின் வட பகுதியில், மக்கள் ரத்தம் சிந்துவதை தடுக்க துருக்கி விடுத்த போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்னதாக நிராகரித்துவிட்ட நிலையில் இந்த புதிய தாக்குதல் நடத்தப்படுகிறது.
இரான் மற்றும் துருக்கியோடு நடத்திய முத்தரப்பு கூட்டத்தில், இட்லிப் மாகாணத்திலுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதை ரஷ்யா தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 30 லட்சம் பேர் வாழுகின்ற இட்லிப் மாகாணம் சிரிய அரசு எதிர்ப்பாளர்களின் கடைசி முக்கிய வலுவிடமாகும்.
ரஷ்யா மற்றும் இரானால் ஆதரவு அளிக்கப்படும் சிரிய ராணுவம் இங்கு மிக பெரிய தாக்குதலை விரைவில் நடத்தவுள்ளது.
Isis இறுதித் தரிப்பிடம். அலெப்போ ஆதரவாளர்கள் இங்கே.
ReplyDelete