Header Ads



சதான் உசேனுக்கு நேர்ந்த கதிதான், டிரம்புக்கு நேரிடும் - ஈரான் ஜனாதிபதி மிரட்டல்

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைத் தான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்திக்க நேரிடும் என ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என, அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஈரான் பல பொருளாதார சிக்கல்களை சந்திக்க வேண்டியதுள்ளது.

ஏற்கனவே, அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ஈரானின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்திருந்தது. இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவுகானி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘1980களில் ஈரான் மீது போர் தொடர்ந்த சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதி அமெரிக்காவுக்கும், டிரம்புக்கும் ஏற்படும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பயந்து ஏவுகணைகளை நாங்கள் கைவிட முடியாது’ என தெரிவித்துள்ளார்.

இதனை வானொலி மூலம் ஆற்றிய உரையில் ரவுகானி தெரிவித்தார்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்;

    எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.

    (அல்குர்ஆன் : 10:11)
    www.tamililquran.com

    ReplyDelete
  3. Don't make Drama. You Iran USA and Israel are same people. Only one different.. you/Iran are a Biggest Actor in the world. Everything's about your are only dramas.. Most of the time Israel Better than you Iran.

    ReplyDelete

Powered by Blogger.