ஞானசாரர் ஒரு பொதுச் சொத்து, அவருக்காக பேசாதது பற்றி வெட்கப்படுகிறோம்
நாட்டில் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் தமது பரம்பரைக்கு பணத்தை சம்பாதிக்கவும் மக்களின் பண்தை கொள்ளையிட்டு தமது இருப்பை அதிகரித்துக்கொள்ளவுமே நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதி வித்தாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -14- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஞானசார தேரர் ஒரு பிக்கு, தமது பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்களை கைவிட்டே பிக்கு ஒருவர் துறவரம் பூணுவார். காவியை அணிந்த பின்னர் ஒரு பிக்கு பொது சொத்து.
விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்களுக்கு உறவினர்கள் இருக்கலாம். நண்பர்கள் இருக்கலாம். இதனால், இவர்கள் மீது உறவினர்கள் விசேட கவனம் செலுத்த கூடும்.
இதன் காரணமாகவே தமது பிள்ளை அல்லது சகோதரரை காப்பற்ற உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துகின்றனர்.
எனினும் பிக்கு என்பவர் பொது சொத்து. இதுதான் எங்களுக்கு இருக்கும் கவலை. பொதுவான பணியாற்றிய, பொது நோக்கத்திற்காக பேசிய பிக்கு ஒருவர் அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்பட்டும் முழு நாட்டில் உள்ள எவரும் பேசாதது கவலைக்குரியது.§
அத்துடன் தடுத்து வைப்புக்கு எதிராக செயற்பாடுகளை அடக்க பணத்தை செலவிட்டு செயற்படும் பல அமைப்புகள் நாட்டில் இயங்கி வருகின்றன.
இந்த பணத்தின் பலம் காரணமாக ஞானசார தேரரின் சிறை தண்டனை தொடர்பில் எவரும் பேசுவதற்கு முன் மறுக்கின்றனரோ என்ற சந்தேகம் எமக்குள்ளது.
குறைந்த பட்சம் நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர் ஒருவர் கூட இது பற்றி பேசுவதில்லை. நாட்டுக்கும் மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை தமது வாக்கு வங்கி நிறைந்தால் போதும் என்று இவர்கள் நினைக்கலாம்.
ஞானசார தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை பாரதூரமான பிரச்சினை. இது சூழ்ச்சியான வேலைத்திட்டம். முழு நாட்டு மக்களும், பௌத்த பிக்குகளும் இணைந்து ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்கள் ஒரு அமைப்பாகவும் பிக்குகள் என்ற வகையிலும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
அப்படி முடியாது போனால், பிக்குகள் அதேபோல் பௌத்தர்களை ஒன்றிணைத்து பாரிய எதிர்ப்பை கட்டியெழுப்பி, ஜனாதிபதி அழுத்தங்களை கொடுத்து ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் எவருக்கும் பயமில்லை. பயப்படும் தேவையும் இல்லை. ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் எமக்கு தெரியும். பணத்திற்கு விலைபோகும் நாடாளுமன்றமே இன்றுள்ளது.
நாட்டில் அன்று கௌரவமான அரசியலில் ஈடுபட்டனர். சிறந்த குடும்பங்களை சேர்ந்த படித்த, கிராமங்களை சேர்ந்த பிரபுக்கள் அன்று அரசியலில் ஈடுபட்டனர். நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இருந்தது.
எனினும் தற்போதுள்ள நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளவர்கள் தமது பரம்பரைக்கு பணத்தை சம்பாதிக்கவும் மக்களின் பணத்தை கொள்ளையிட்டு தமது இருப்பை அதிகரித்துக்கொள்ளவுமே நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
இதனால், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது. பணம் கொடுத்தால் எந்த பக்கமும் தாவுவார்கள். பணத்திற்காக எந்த நேரத்திலும் விலை போக கூடியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களே நாட்டில் உள்ளனர்.
இது குறித்து நாங்கள் கவலையடைகின்றோம், வெட்கப்படுகின்றோம் என வித்தாரந்தெனிய நந்தா தேரர்
நாங்களும் இந்த பிக்குவை நினைத்து வெட்கப்படுகிறோம்
ReplyDeleteபோதுசொத தின்னு தின்னு பொது சோத்தாவே ஆகிட்டாங்கள்
ReplyDelete