ஜலாலுதின் ஹக்கானி உயிரிழந்தார்
ஆப்கானிஸ்தானில் மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் குழுக்களில் ஒன்றான ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் ஜலாலுதின் ஹக்கானி உயிரிழந்து இருப்பதாக, தலீபான் இயக்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஹக்கானி நெட்வொர்க்கின் அமைப்பை, ஜலாலுதின் ஹக்கானியின் மகன் சிராஜுதின் ஹக்கானி வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 1980 ஆண்டுகளில், சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஆப்கன் முஜாகிதின் தளபதியாக மறைந்த ஜலாலுதின் ஹக்கானி தீவிரமாக செயல்பட்டார். பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இவருக்கு அப்போது ஆதரவாக இருந்தன. ஒசாமா பின்லேடன் உள்ளிடோருடன் நெருங்கிய நட்புறவை ஜலாலுதின் ஹக்கானி கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துக்கம் போல
ReplyDeleteஇவருக்கு ஆயுதங்கள், பயிற்சிகள் மற்றும் பொருளாதார உதவிகள் அமெரிக்காதான் 100% வழங்கியது. இதனால்தான் ரஷ்யாவை அமெரிக்கா விரட்ட முடிந்தது.
ReplyDelete