Header Ads



விக்னேஸ்வரன் தலைமையில், புதிய அரசியல் கூட்டணி - தமிழ் கூட்டமைப்பு இல்லாமல் போகுமா..?

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணியாக உருவாக்கப்படும் இந்த புதிய கூட்டணியில் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கட்சிகள் சாதகமான பதில்களை வழங்கியிருப்பதாகவும் பேசப்படுகிறது. வடக்கை சேர்ந்த கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் மற்றும் வெளிநாடு வாழ் புலம்பெயர் சமூகத்தின் முழுமையான ஆதரவுடன் இந்த புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்து, சபை கலைக்கப்பட்டதும் புதிய அரசியல் கூட்டணியின் தலைமை பொறுப்பை விக்னேஸ்வரன் ஏற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

3 comments:

  1. மகிந்தவுக்கு சாதகமான ஒரு சூழலை தமிழர் மத்தியில் உருவாக்க வாய்ப்பில்லை. ஆனால் அதிதீவிரம்பேசி தேர்தல் பகிஸ்கரிப்புக்கோ அல்லது தமிழரின் கூட்டு வாக்களிப்பு வளமையில் பிழவுக்கோ வழி வகுப்பவர்களால் மட்டும்தான் மகிந்தவை வெற்றி பெற செய்ய முடியும். இதுதான் இந்த சதுர்ங்க விழையாட்டின் விதி. ஆனால் நாட்டிலும் வெளிப்புலத்திலும் சதுரங்கம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. கஜேந்திரன் பொன்னம்பலம் வரும்போது இருந்த போலி எதிர்பார்ப்பு மீண்டும் உருவாக்கப் படுகிறது. அவ்வளவுதான். ஆனாலும் செல்வநாயகத்தின் பல்முகப்பட்ட அமைப்புரீதியான ஜனநாயக அரசியலை கூட்டமைப்பு தொடர்ந்தும் புறக்கணிக்க முடியாது.

    ReplyDelete
  2. விக்னேஸ்வரனுக்கு பதவி￰யாசை ￰பி￰டித்துவிட்டது .

    ReplyDelete
  3. வட மாகாணத்துக்கு ஒரு சிறந்த எதிர் கட்சியாக இருந்து சரி பிழைகளை சுட்டி காட்ட வேண்டும். இப்பொழுதுள்ள எதிர்க்கட்சியான ஈபிடிபி யை ஓரங்கட்ட மக்கள் இந்த புதிய கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.