சவுதி அரேபியாவில் முதன்முறையாக, பெண்ணோருவர் செய்தி வாசித்தார்
சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்ணோருவர் செய்தி வாசிப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு, அந்நாட்டு பெண்கள் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், அந்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த பல செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
பல சட்டதிட்டங்களையும் அவர் உடைத்தார். அதன் பின்னர், பெண்களுக்கு கார் ஓட்டுவது முதல் விமானம் ஓட்டுவது வரை என அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அல் சவுதியா எனும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாலை நேரத்தில் மட்டும் ஆண் செய்தி வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிப்பார் என்று கூறப்படுகிறது.
இவர் தான் சவுதியின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் ஆவார். சவுதி அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு நாடுகளில் உள்ள பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
முடிகள் மறைக்கப்படாத முகமும்
ReplyDeleteகைகள் மறைக்கப்படாத கரங்களும்
வேண்டுமானால் சவூதிக்குப் பொருத்தலாம்
ஆனால், இஸ்லாத்துக்குப் பொருந்தாது
இதுவே இன்றைய அரேபியா!
Where is Mahrami and Ajnabi position and action in Islamic world ???? Can woman publicly show them to other males unnecessarily????(need fatwa?) Did Fathima(daughter of Profet.Muhammed PBUH) and Aisha (wife of Profet.Muhammed PBUH) come publicly to show them males ???? Prnice Salman have to answer above question if he is muslim????
ReplyDelete